‘லியோ’ சூட்டிங்கில் இப்படி ஒரு பிரச்சினையா?.. மூட்டையை கட்டிட்டு வரவேண்டியது தான்!..

vijay
விஜயின் லியோ பட சூட்டிங் குலு குலுனு காஷ்மீரில் படமாக்கிக் கொண்டிருக்கின்றனர். லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் தான் ‘லியோ’.இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

vijay1
இந்தப் படத்தின் முதல் செட்யூல் சென்னையில் நடந்து முடிந்து அடுத்தக் கட்ட படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கின்றன.இதற்காக தனி விமானம் மூலம் படக்குழு காஷ்மீர் பறந்து சென்றது. போன வேகத்தில் த்ரிஷா மட்டும் திரும்பி வந்தார்.
ஒரு வேளை படத்தில் இருந்து விலகி விட்டாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில் காஷ்மீரில் உள்ள சீதோஷன நிலை த்ரிஷாவின் உடம்பிற்கு ஒத்து வரவில்லை என்று திரும்பி வந்தார்.இப்போது மறுபடியும் சென்றிருக்கிறார். இந்த நிலையில் காஷ்மீரில் 2 மாதம் செட்யூல் நடத்த திட்டமிட்டனர்.

vijay2
ஆனால் அதற்குள்ளாகவே ஒட்டுமொத்த படக்குழுவும் திரும்பி வரும் சூழ் நிலையில் இருப்பதாக சில செய்திகள் கசிந்து வந்தன. ஆனால் விசாரித்ததில் திட்டமிட்டப்படி எல்லா காட்சிகளையும் முடித்த பின்னரே தான் சென்னை திரும்புவார்களாம். ஆனால் என்ன பிரச்சினை என்றால் ஸ்ரீநகர் அருகாமையில் உள்ளா சுற்றுத்தலமான பெகல்காம் என்ற இடத்தில் தான் படப்பிடிப்பை நடத்துகின்றனராம்,
இதையும் படிங்க : அஜித் போனா என்ன!.. நான் இருக்கேன்.. விக்னேஷ் சிவனுக்கு உதவிக் கரம் நீட்டிய நடிகர்!..
அங்கு காலையில் எழுந்து பார்த்தால் வானிலை 7 டிகிரியில் இருந்து 10 டிகிரி வரை தான் இருக்கிறது. அதன் காரணமாகவே காலை முழுவதும் வெட்டியாகவே இருக்கிறார்களாம். மதியத்திற்கு மேலாகத்தான் படப்பிடிப்பையே நடத்துகின்றனராம். இந்த நடைமுறை பிரச்சினை இருப்பதால் தான் கொஞ்சம் தயங்கி கொண்டிருக்கிறார்களாம் படக்குழு.

vijay3