ஒரு ‘விக்’ கால வந்த பிரச்சினை!..எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு.. படமே நின்னுப் போச்சு..
அந்த கால சினிமாவில் பிரச்சினைகள் வருவதும் அதன் பின் அதை சரிசெய்து பின் ஒன்றாக இணைவதும் சர்வ சாதாரணமாகவே நடந்திருக்கிறது. அவர்களுக்குள் அப்போதைய காலத்தில் அது ஒரு ஆரோக்கியமான சண்டைகளாகவோ ஆரோக்கியமான போட்டியாகவோ தான் இருந்திருக்கிறது.
அந்த வகையில் எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் அவ்வப்போது சில மனக்கசப்புகள் வருவதும் அதன் பின் என் படத்திற்கு கண்ணதாசன் தான் பாடல் எழுதவேண்டும் என்று எம்ஜிஆர் அடம்பிடிப்பதும் இப்படி பல வகையான சம்பவங்கள் நடந்தேறியிருக்கிறது.
இதையும் படிங்க : தேவா இசையமைத்த இந்த ஹிட் பாடலுக்கு வைரமுத்துவால் வந்த பிரச்சனை… இப்படியெல்லாம் நடந்திருக்கா??
அந்த வகையில் கண்ணதாசன் முதன் முதலில் தான் தயாரிக்கிற படத்திற்கு எம்ஜிஆரை ஹீரோவாக்க வேண்டும் என எண்ணி ‘ஊமையன் கோட்டை’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார். ஆனால் அந்த படம் பாதியிலேயே நின்று விட்டதாம். இந்தப் பிரச்சினைக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பது இன்று வரை பலபேருக்கு தெரியாதாம்.
அதன் உண்மையான காரணம் என்ன என்பதை கண்ணதாசன் கூட இருந்தவரும் தயாரிப்பாளருமான வீரய்யா ஒரு பேட்டியின் போது கூறினார். அதாவது ஊமையன் கோட்டை படம் ஆரம்பித்ததில் இருந்தே எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே பல வகையான மனக்கசப்புகள் இருந்து கொண்டே வந்தன.
செட்டில் தனக்கு உண்டான வசதிகளை எம்ஜிஆர் சரியாக இருக்குமாறு எதிர்பார்ப்பாராம். அது சரியாக அமையாத பட்சத்தில் எம்ஜிஆருக்கு கோபம் வருமாம். அதே போல தான் எம்ஜிஆர் நினைத்த சில விஷயங்கள் படப்பிடிப்பில் சரியாக நடக்கவில்லையாம். குறிப்பாக எம்ஜிஆர் பயன்படுத்த வேண்டிய விக் கூட தாமதமாக வந்ததாம்.
அதை வைத்த் பெரிய பிரச்சினையே கிளம்பிவிட்டது. அந்த பிரச்சினையால் தான் ஊமையன் கோட்டை படம் பாதியிலேயே நின்று விட்டது என வீரய்யா கூறினார்.