ஒரே நேரத்தில் எம்ஜிஆர் - சிவாஜி படங்களின் கால்ஷீட்!.. பரிதவித்த சாவித்ரி.. கன்னாபின்னானு பேசிய கவிஞர்..
அந்தக் கால சினிமா வாழ்க்கையை புரட்டிப் பார்த்தால் ஆச்சரியம் தரும் சில தகவல்களும் செய்திகளும் புதைந்து கிடக்கும். மேலும் அன்றைய காலகட்டத்திலும் பிரபலங்கள் இடையே ஏகப்பட்ட பிரச்சினைகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும் சில சமயம் நம்மை யோசிக்க வைக்கும், சில சமயம் மிரள வைக்கும்.
ஏனெனில் இன்றைய காலகட்டம் மாதிரி கிடையாது, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசிட்டு போகிற வழக்கமே அப்பொழுது இல்லை. சண்டை போடுவார்கள் அப்புறம் கூடுவார்கள். அது பார்க்கவே மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். இப்படி ஒரு பிரச்சினைதான் நடிகையர் திலகம் சாவித்ரி விஷயத்திலயும் அரங்கேறியிருக்கிறது.
இதையும் படிங்க : தனுஷின் சூப்பர் ஹிட் பாடல்!.. கேட்டாலே காண்டாகும்.. மனம் குமுறும் வெற்றிமாறன்!..
கண்ணதாசன் தயாரிப்பில் சிவாஜி-சாவித்ரி நடிப்பில் வெளியான படம் தான் ‘இரத்தத்திலகம்’ என்ற திரைப்படம். இந்த படம் தயாரன போதே கண்ணதாசனுக்கும் சாவித்ரிக்கும் இடையே ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்த வண்ணம் இருந்திருக்கின்றன. அதன் பின்னனியில் இருக்கும் காரணமே அதே நேரத்தில் எம்ஜிஆருடன் வேட்டைக்காரன் படத்தில் சாவித்ரி கமிட் ஆகியிருந்தது.
இதனால் இந்த படம் சில வகைகளில் பாதிப்பு ஏற்படுவதை பார்த்த கண்ணதாசன் ஒருமையில் சாவித்ரியை வாய்க்கு வந்தப்படியெல்லாம் திட்டியிருக்கிறார். இதை அப்படியே அங்கு இருந்த ஒருவர் சாவித்ரியிடம் சொல்லிவிட்டனராம்.
இதனால் கடுங்கோபத்தில் சாவித்ரி தன் மொத்த கால்ஷீட்டையும் வேட்டைக்காரன் படத்திற்கே கொடுத்து விட்டாராம். இதனால் இரத்தத்திலகம் படத்தின் படப்பிடிப்பு பெரிதளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின் அனைவரும் பேசி கண்ணதாசனையும் சாவித்ரியையும் சமாதானம் படுத்திய பிறகே அந்த படத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர். இந்த சுவாரஸ்ய தகவலை கண்ணதாசனுடனே இருந்து பணிபுரிந்தவரும் தயாரிப்பாளருமான வீரய்யா ஒரு பேட்டியில் கூறினார்.