வாய்ப்பில்லை ராசா!.. சிம்பு படத்திற்கு வந்த புதிய சோதனை!.. இதெல்லாமா ஒரு காரணம்?..
தமிழ் சினிமாவின் ஒரு முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலங்கள் விரும்பும் நட்சத்திரமாகவே வளர்ச்சி அடைந்தார் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே கேமராவின் கோணங்களை பார்த்து நடிக்கக் கூடியவராக திகழ்ந்தார் சிம்பு.
அந்த அளவுக்கு சினிமா மீது ஆர்வமாக இருந்தவர். படிப்படியாக வளர்ந்து தன் தந்தை படத்தின் மூலமே ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ஒரு லிட்டில் சூப்பர் ஸ்டாராக ஒரு பெரிய அந்தஸ்தை பெற்றார். இன்னும் ஒரு படி மேலாக ஒரு இயக்குனராக தயாரிப்பாளராக களம் இறங்கினார்.
தன் அப்பாவே போலவே ஒரு பன்முக கலைஞனாக மாறினார் சிம்பு. இவரை ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக காட்டிய பெருமை இயக்குனர் கௌதம் வாசு தேவ் மேனனையே சேரும். அவர் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் சிம்புவின் கெரியரில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து இருவரும் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இணைந்தனர்.இந்த இரண்டு படங்களுமே மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த இரு படங்களின் இரண்டாம் பாகம் வருவதற்கான அறிகுறிகளும் இருப்பதாக கௌதம் வாசுதேவ் மேனனே ஒரு பேட்டியில் கூறிந்தார்.
மேலும் வெந்து தணிந்தது காடு படம் முடியும் நேரத்தில் இரண்டாம் பாகத்திற்கான ஒரு ட்விஸ்டை வைத்து தான் முடித்திருப்பார்கள். ஆனால் சமீபத்தில் சிம்புவிற்கும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் இடையே ஏதோ பிரச்சினைகள் இருக்கிறதாம். இருவருக்கும் இடையே ஒரு பனிப்போரே நிகழ்ந்து விட்டதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருந்தார். இதன் காரணமாக அந்த இரு படங்களின் இரண்டாம் பாகம் வெளிவருவதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : ரஜினி முகத்தில் காரித் துப்பிய ஸ்ரீதேவி.. அதிர்ந்து போன படக்குழு!.. இது எப்ப நடந்துச்சு தெரியுமா?…