கமல் படத்தின் கதையே இதனால மாறி போயிடுச்சு.. – ஏமாற்றமடைந்த இயக்குனர்!
1972 இல் துவங்கி 1994 வரை பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ்.பி முத்துராமன். எம்.ஜி.ஆர், சிவாஜியில் துவங்கி கமல் ரஜினி வரை பலரை வைத்தும் இவர் திரைப்படங்கள் இயக்கியுள்ளார். தமிழில் முதன் முதலாக படத்தில் இரண்டு பாகங்கள் வைத்து திரைப்படம் எடுத்தவர் எஸ்.பி முத்துராமன்தான்.
எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1979 ஆம் ஆண்டு கல்யாணராமன் என்கிற திரைப்படம் வந்தது. அது ஒரு காமெடி ஃபேண்டஸி திரைப்படம் என கூறலாம். மூளை வளர்ச்சி குறைவாக உள்ள அண்ணன் கமலும், தனது தந்தையும் இறந்துவிட அதை கண்டறிய தம்பி கமல் ஊருக்கு வருகிறார்.
அப்போது ஆவியாக இருக்கும் அண்ணன் கமல் இவருக்கு உதவிப்புரிவதாக படத்தின் கதை இருக்கும். இந்த படம் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான ஹிட் கொடுத்தது. ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் டபுள் ஆக்டிங் திரைப்படங்களை இயக்குவது கடினமான காரியமாக இருந்தது.
ஜப்பானில் நடந்த சம்பவம்:
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படம் தயாரானது. இந்த படத்தின் டபுள் ஆக்டிங் திரைப்படத்தை சிறப்பாக காட்ட உதவும் கேமிரா ஒன்று ஜப்பானில் இருப்பதாக தகவல் வந்தது. எனவே இரண்டு கமலையும் ஒன்றாக காட்டும் விதத்தில் படத்தின் கதை தயாரானது.
ஆனால் ஜப்பான் சென்ற பிறகுதான் அந்த கேமிரா தற்சமயம் ஜப்பானில் கிடைப்பதில்லை என்கிற விஷயம் இயக்குனருக்கு தெரிந்துள்ளது. எனவே படத்தின் மொத்த கதையையும் மாற்றிதான் ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படமானது.
ஒரு பேட்டியில் இதுக்குறித்து அவர் கூறும்போது இப்போதும் கூட ஜப்பானில் கல்யாணராமன் நான் எதிர்பார்த்த அளவு சிறப்பாக வரவில்லை என்றே தோன்றுகிறது என கூறியுள்ளார்.