சிவாஜி வீட்ல நடந்த பஞ்சாயத்து.. விசித்ரா - கவுண்டமணி இடையே இப்படி ஒரு பிரச்சினையா?

by Rohini |   ( Updated:2023-11-19 10:31:31  )
vischi
X

vischi

Vichithra - Goundamani: தமிழ் சினிமாவில் க்ளாமர் நடிகைகளுக்கு என்று 80கள் மற்றும் 90களில் ஒரு மதிப்பு இருந்தது. க்ளாமருக்கு என்றே சில நடிகைகள் கோலோச்சி இருந்தார்கள். சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி என ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவையே ஆட்டிப் படைத்தார்கள்.

அவர்களை அடுத்து விசித்ரா, ஊர்மிளா, சர்மிளா என அடுத்த தலைமுறையினர் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தினார்கள். இதில் விசித்ரா மற்றும் சர்மிளா ஐட்டம் பாடல்கள் மட்டுமில்லாமல் துணை நடிகைகளாகவும் கலக்கினார்கள்.

இதையும் படிங்க: தன் படத்தில் விஜய் படத்தை போட சொன்ன அஜித்!. இது புரியாம அடித்துக்கொள்ளும் ஃபேன்ஸ்..

பெரும்பாலும் கவுண்டமணிக்கு ஜோடியாகவே விசித்ராவும் சர்மிளாவும் ஏகப்பட்ட படங்களில் நடித்தார்கள். குறிப்பாக டைட்டானிக் பட காமெடியில் கவுண்டமணியுடன் சேர்ந்து விசித்ராவின் நடிப்பு மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும்.

இப்படி ஏராளமான படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து வந்த விசித்ரா பெரிய பெரிய நடிகர்களின் படங்களிலும் ஒப்பந்தம் ஆனார். ரஜினி, கார்த்திக், பிரபு ஆகியவர்களின் படங்களில் விசித்ராவை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் பெரிய குடும்பம் படத்திற்காக சிவாஜி கணேசன் வீட்டில் தான் பூஜை நடந்ததாம். அந்தப் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். அப்போது கே.எஸ்.ரவிக்குமார் விசித்ராவை அழைத்து ‘உனக்கும் கவுண்டமணிக்கும் என்ன பிரச்சினை?’ என கேட்டாராம்.

இதையும் படிங்க: விஜய் ஷாருக்கான விட இவர்தான் எனக்கு ரொம்ப முக்கியம்… என்னப்பா அட்லி பொசுக்குனு இப்படி சொல்லிட்ட!…

அதற்கு விசித்ரா ‘அப்படி எதுவும் இல்லையே’ என சொல்லியிருக்கிறார். இருந்தாலும் வா வந்து பிரச்சினையை சரி செய்து விடலாம் என்று கே.எஸ். ரவிக்குமார் சொல்லியிருக்கிறார். என்ன பிரச்சினை என கேட்டதற்கு கவுண்டமணிக்கு வணக்கம் சொல்லவில்லையாமே? என கே.எஸ்.ரவிக்குமார் சொல்லியிருக்கிறார்.

விசித்ரா வணக்கம் சொன்னால்தான் இந்தப் படத்தில் நடிப்பேன் என கவுண்டமணி கே.எஸ்.ரவிக்குமாரிடம் சொன்னாராம். ஆனால் எப்பொழுது அவரை பார்த்து வணக்கம் சொல்லாமல் வந்தேன் என தெரியவில்லை. இதை ஒரு பெரிய பிரச்சினையாக கவுண்டமணி ஆக்கிட்டாரு என விசித்ரா கூறினார்.

அதுமட்டுமில்லாமல் நடிக்கும் பொழுதில் இருந்தே என் வேலை என்னவோ அதை முடித்துக் கொண்டு நான் ஸ்பாட்டில் இருந்து கிளம்பிவிடுவேன் என்றும் யாரிடமும் எதையும் வெட்டிக்கதை அடிப்பது, பார்ட்டி கொண்டாடுவது என எதிலுமே நான் பங்கேற்க மாட்டேன் என்றும் விசித்ரா கூறினார்.

இதையும் படிங்க: எங்க ஹார்ட்டு வீக்கு!.. இதோட நிறுத்திக்கோ!.. லாஸ்லியா அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்…

Next Story