Cinema History
ரெண்டு படத்துல வாய்ப்பு போச்சி!.. வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கலாம் விஜய் சேதுபதி!…
தமிழ்த்திரை உலகில் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்தவர் என்றால் அது இவர் தான். இவருக்கும் தயாரிப்பாளர் லலித்குமாருக்கும் சமீபத்தில் மிகப்பெரிய சண்டையே வந்துவிட்டதாம். லலித்குமாரைப் பற்றி வேறொரு இயக்குனரிடம் விஜய்சேதுபதி ஏதோ சொல்லி இருக்கிறார்.
அது தயாரிப்பாளரின் காதுக்குப் போய் இருக்கிறது. உடனே அவர் டென்சனாகி விஜய்சேதுபதியின் ஆபீசுக்குப் போய் 2 படங்களுக்குக் கொடுத்த அட்வான்ஸைத் திருப்பிக் கேட்டு வாங்கி வந்து விட்டாராம். அந்த அளவுக்கு பெரிய மோதலாம்.
இதையும் படிங்க… தாத்தா வாராரு.. தாத்தா வாராரு.. விரைவில் இந்தியன் 2 பர்ஸ்ட் சிங்கிள்… கமலோட கேரக்டர் இதுதான்!
அப்படி இருக்கும்போது அவரது தயாரிப்பில் விஜய்சேதுபதி எப்படி நடிப்பார்? லியோ படத்திற்கு அவர் நடிப்பதாக இருந்து கேன்சல் ஆகிவிட்டது. விஜய் சேதுபதி நடித்தால் லியோ படத்திற்கு பிளஸ் தான். என்றாலும் அப்படி அவர் நடித்தால் அவரது தன்மானம், சுயகௌரவம் எல்லாம் என்னாவது?
லியோ படத்திற்கு வசனகர்த்தாவாக பணியாற்றியவர் ரத்னகுமார். இவர் டைரக்டர் லோகேஷின் நெருங்கிய நண்பர். இவர் மாஸ்டர் படத்திலும் வசனகர்த்தா. விஜய் சேதுபதி சந்தானம் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்து அசத்திய படம் விக்ரம். அந்தப் படத்தில் ஒரு கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக வருவார். அப்படி இருக்கும்போது அதே கூலிங் கிளாஸ் உடன் ரத்னகுமார் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார்.
இதையும் படிங்க… காத்திருந்தவங்க கேனைகளா? பாண்டியராஜனிடம் வருத்தம் தெரிவித்த ரஜினி.. இது எப்போ நடந்தது?
அப்போது விஜயின் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வந்தது. அதைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை சந்தானம் கேரக்டரில் விஜய்சேதுபதி லியோவிலும் நடிப்பாரோ என கேள்வி கேட்டார்களாம். அதற்குப் பதில் சொல்லும் வகையில் வலைப்பேச்சு பிஸ்மி அப்போது விஜய் சேதுபதி, லலித்குமார் மோதல் நிலைமை இப்படி இருக்கும்போது ரத்னகுமார் ஏன் இப்படி பதிவுகளைப் போட்டு வருகிறார் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
மாஸ்டர், விக்ரம் படங்களில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார் விஜய் சேதுபதி. ஒருவேளை லியோ படத்திலும் அவர் நடித்து இருந்தால் இந்தப்படத்தின் மார்க்கெட் லெவலே வேற என்ற அளவில் கூட இருந்து இருக்கும்.