தளபதி விஜயின் திரையுலகப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்த படம் கில்லி. இந்தப் படத்தைத் தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம். படம் ரிலீஸாகும்போது அவரது சொத்தையே விற்க வேண்டிய நிலைமை வந்ததாம். இதுகுறித்து தயாரிப்பாளர் சுந்தரி பிலிம்ஸ் முருகன் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இப்படி சொல்கிறார்.
இதையும் படிங்க… எப்பா சூரி நீயா இப்படி நடிச்சிருக்கே? படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை..! பயில்வான் விமர்சனம்
விஜய் நடித்த கில்லி படத்தோட ரிலீஸின்போது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கையில பணம் இல்லை. படம் தள்ளிப்போற மாதிரி இருந்துச்சு. அதனால மெயின்ரோடு சரவணபவன் பக்கத்துல ஒட்டி இருக்குற 14 கிரவுண்ட் இடத்தை எழுதிக்கொடுத்தாரு. இன்னைக்கு அதோட மதிப்பு 60… 70 கோடி போகும். அன்னைக்கு அதோட மதிப்பு 2 கோடியே 90 லட்சம்.
இடையில் சித்ராலட்சுமணன் குறுக்கிட்டு ‘படம் ரிலீஸாகும்போது லாபம் இல்லையா?’ன்னு கேட்கிறார். அதற்கு தயாரிப்பாளர் முருகன் லாபம் இல்லை. கில்லி ரிலீஸாகும்போது அவருக்கு அது டெபிசிட் படம். இந்த நேரத்துல அந்தப் படம் அவருக்குக் கைகொடுக்குதுல்ல.
அப்போ அவரு சினிமாவை நேசிச்சதாலத் தான். உண்மையா நேசிச்சிருக்காரு. சினிமாவை நேசிக்கிறோம். அது என்னைக்காவது நம்மளைக் காப்பாத்தும்கற நம்பிக்கையில தான் தொழில் செய்றோம். அவ்வளவு தான். நம்ம சினிமாவுக்கு என்ன செஞ்சோம்னு தெரியல. சினிமா நமக்கு செய்யணும்னு நினைக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கில்லி அப்போது 200 நாள்கள் வரை ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதே போல இது சமீபத்தில் ரீ ரிலீஸ் ஆனது. அப்போதும் உலகம் முழுவதும் 50 கோடி வரை கலெக்ஷன் ஆனதாக சொல்லப்படுகிறது. இந்திய திரை உலகிலேயே அதுவும் ரீ ரிலீஸில் அதிகமாக வசூலித்த படம் இதுதானாம்.
இதையும் படிங்க… பிரேமலு பிரபலத்தை வளைத்து போட்ட குட் பேட் அக்லி டீம்… கூடவே இன்னொரு வில்லன் நடிகரும் வராராம்!…
2004ல் படம் ரிலீஸாகும்போது பார்க்காத 2கே கிட்ஸ்கள் இப்போது பார்த்து உற்சாகம் அடைந்தனர். தரணியின் இயக்கம் அபாரம். படத்தின் விறுவிறுப்பான காட்சியும், சூப்பர்ஹிட் பாடல்களும், கதை ஓட்டமும் தான் அபார வெற்றிக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ‘அப்படி போடு போடு’ பாடல் தான் அப்போது இளசுகளின் கொண்டாட்டமாக அமைந்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…