Connect with us
shankar

Cinema History

துப்பாக்கி காட்டி ஷங்கரை மிரட்டிய தயாரிப்பாளர்.. பரிதாப நிலைக்குபோய் அவரிடமே வாய்ப்பு கேட்ட சோகம்..

இந்திய சினிமாவே கொண்டாடும் இயக்குனர்களில் முக்கியமானவர் ஷங்கர். சங்கர் தற்போது ராம்சரணின் RC-16 எனப்படும் திரைப்படத்தை இயக்குகிறார். இதற்கு இணையாகவே நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 படத்தையும் மீண்டும் இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 2.0 திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக கொடுத்தே ஆக வேண்டும் என்று கட்டாயத்தில் உள்ளார்.

இன்று இவரை வைத்து படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவருடைய ஆரம்ப காலம் சற்று கடினமாகவே அமைந்திருக்கிறது. இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக 17 படங்களில் பணியாற்றியதை தொடர்ந்து இயக்குனராக வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். அப்பொழுது இவரது நண்பன் மூலம் தயாரிப்பாளர் குஞ்சு மோகன் அறிமுகம் கிடைக்கிறது. குஞ்சுமோன் மலையாள திரைப்படத்துறையில் விநியோகஸ்தராக ஆரம்பித்து பின்னர் மலையாளத் திரைப்படத் துறையில் மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவெடுத்தவர்.

இதையும் படிங்க- அடுத்த இசை வாரிசுனு இளையராஜா சொன்னது சரிதான்! கார்த்திக்ராஜா இசையில் இவ்ளோ சூப்பரான பாடல்களா?

 

shankar 2

shankar 2

மலையாள சினிமாவில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் தடம் பதிக்க ஆசைப்பட்டார். தமிழில் முதல் படமே பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டார் அதற்கான இயக்குனரையும் தேடிக்கொண்டிருந்தார். பின்னர் முதல் பட வாய்ப்பானது இயக்குனர் A.வெங்கடேஷிற்கு கிடைக்கிறது.

இதையும் படிங்க- இந்த கம்பெனியில எப்படியாவது நடிக்கணும்!.. ரஜினிக்கு இருந்த தீரா ஆசை.. அதுக்கு காரணம் இதுதான்!…

 

 அவரிடம் இருந்தது சிறிய பட்ஜெட் கதை ஆனால் குஞ்சுமோன் தமிழில் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க நினைத்தார். உடனே தன்னுடன் தங்கி இருந்த நண்பரான ஷங்கரை சிபாரிசு செய்கிறார். கதை கேட்டவுடன் மிகவும் பிடித்துப் போகிறது. பின்னர் ஜென்டில்மேன் என்னும் உருவாகிறது. படம் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் மழையும் பொழிந்தது.

kunjimon

kunjimon

பின்னர் குஞ்சுமோன் மீண்டும் ஒரு பிரம்மாண்ட படத்தை தயாரிக்க விரும்புகிறார். மீண்டும் ஷங்கருடன் இணைகிறார். இந்த படத்திற்காக ஷங்கர் ஜென்டில்மேனில் வாங்கியதை விட ஒரு லட்சம் அதிகமாக கேட்டுள்ளார். அதற்கு குஞ்சுமோன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து டேபிள் மீது வைத்து இவ்வளவுதான் சம்பளம் போய் படத்தை எடுங்க என்று கூறியுள்ளார். பின்னர் பிரபுதேவா ஹீரோவாக வைத்து காதலன் எனும் திரைப்படத்தை இயக்குகிறார்.

kadhalan movie

kadhalan movie

காதலன் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியது. அதைனை தொடர்ந்து சங்கர் அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களை இயக்கி தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தார். ஆனால் குஞ்சுமோன் அதன் பின் அவர் தயாரித்த படங்கள் தோல்வியை கண்டது மேலும் தொழில் ரீதியாக மிகப் பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தி அவரை பின்னடைய செய்தது.

இதையும் படிங்க- என்னடா கேமியோ? அஜித் படத்தில் அப்பவே கலக்கிய கமல் – தூசி தட்டி எடுத்தாச்சுல

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு பொது விழா ஒன்றில் இருவரும் சந்திக்க நேர்ந்தது. அதில் மேடையில் ஓப்பனாகவே குஞ்சு மோன் ஷங்கரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். அவர் இப்ப இருக்குற உயரத்திற்கு மீண்டும் எனக்கு ஒரு படம் கொடுக்கலாம் என்று இறங்கி வந்து வாய்ப்பு கேட்டுள்ளார். இதற்கு ஷங்கர் இன்றளவும் மௌனம் காத்து கொண்டிருக்கிறார். ஆனால் ஷங்கருக்கும் தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு எப்போதும் நன்றி கடன் பட்டுள்ளார்.

shankar with kunjimon

shankar with kunjimon

மேலும் தற்பொழுது குஞ்சுமோன் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்றும் சங்கர் போன்ற புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

google news
Continue Reading

More in Cinema History

To Top