ரஜினி, கமலை பின்னுக்கு தள்ளி வசூல் வேட்டை நடத்திய நடிகர்!.. அட செம மாஸ் காட்டியிருக்கார்!...

by Sathish G |   ( Updated:2023-02-13 14:51:28  )
rajini kamal
X

80களில் உச்சத்தில் இருந்த நடிகர்கள் ரஜினி மற்றும் கமல். இருவரது படங்களும் அன்றைய காலகட்டத்தில் சக்க போடு போட்டுக் கொண்டு ஓடும். இருவரும் வசூலில்சாதனை புரிந்து வசூல் மன்னர்களாக வலம் வந்த காலம் அது.

இவர்களுக்கிடையே தன் துடிப்பான நடிப்பின் முலமம் அதிரடி சண்டை காட்சிகள் முலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த். அன்றைய காலகட்டத்தில் ரஜினி அளவிற்கு சம்பளம் பெரும் நடிகராக இருந்தார். அந்த அளவுக்கு அவரின் வளர்ச்சி இருந்தது.

vijayakanth

1987 ஒரே நாளில் நான்கு படங்கள் வெளியானது. அதில் ரஜினி நடிப்பில் ஏ.வி.எம் தயாரிப்பில் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம் ”மனிதன்”. இதேபோல் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இளையராஜா இசையில் கமல் நடிப்பில் வெளியான படம் ”நாயகன்”. இதில் மனிதன் படம் பெரும் தோல்வியை தழுவியது.

manithan

manithan

மேலும் கமல் நடிப்பில் வெளியான நாயகன் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அப்படம் 35 வருடங்கள் கழித்தும் பேசும் படமாக அமைந்துள்ளது. ஆனால் உண்மையில் அன்றைய காலகட்டத்தில் வென்றது இந்த இரண்டு படங்கள் மட்டும் அல்ல.

vijayakanth with radhika

இவர்களுடன் இணைந்து வெளியான விஜய்காந்தின்” உழவன் மகன்” மற்றும் ”சட்டம் ஒரு விளையாட்டு”. இதில் ”உழவன் மகன் ”தான் அதிக வசூல் சாதனை செய்தது என்று நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் டி.சிவா கூறியிருந்தார். எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த‌ ”சட்டம் ஒரு விளையாட்டு” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. உழவன் மகன் திரைப்படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் ‘இது நான் நடிக்க வேண்டியம் படம்’ என விஜயகாந்தை பாராட்டியதோடு, படக்குழுவினருக்கு விருந்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினி, கமலை பின்னுக்கு தள்ளி வசூல் வேட்டை நடத்திய பிரபலம்!.. .அட செம மாஸ் காட்டியிருக்கார்!…

Next Story