சினிமாவை பொறுத்த வரைக்கும் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறிய எத்தனையோ பிரபலங்கள் அனைத்து மொழி சினிமாக்களிலும் இருக்கிறார்கள். கூடவே நடித்து நட்பாகி அது பின் காதல் ஆகி திருமணத்தில் முடியும் பல சம்பவங்கள் இன்று வரை அதுவும் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நடந்து கொண்டே வருகின்றன. அந்த வகையில் நட்சத்திர தம்பதிகளாக ஜொலிக்கும் சில ஜோடிகளை பார்த்து ரசிகர்கள் பொறாமைப்படுவதும் உண்டு. அதே நேரத்தில் “என்ன நீங்க இவங்கள போய் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே” என்று கதறியதும் உண்டு. இதில் இரண்டாவது ரகத்தில் வரும் சில ஜோடிகளை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க இருக்கிறோம்.

ப்ரீத்தா ஹரி: ஏற்கனவே நடிகை ப்ரீத்தா ஒரு நட்சத்திர தம்பதிகளின் மகள் .அதன் பின் நடிகை .அதன் பிறகு இயக்குனர் ஹரியின் மனைவியாக இருக்கிறார். இப்பொழுது மூன்று ஆண் குழந்தைகளுக்கு ஒரு நல்ல அம்மாவாகவும் இருந்து வருகிறார் .அதையும் தாண்டி தன் குடும்பம் தான் பெரியது. என் கணவர் தான் பெரிசு என்று புகுந்த வீட்டின் பெருமையை நிலைநாட்டி வரும் ஒரு நல்ல தமிழ் குடும்பப் பெண்ணாக இருந்து வருகிறார் பிரீத்தா. அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி வந்தாலும் அவர்களை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு வருத்தம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது .விஜயகுமாரின் குடும்பத்தின் ஐந்து பெண் குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் நல்ல அழகும் நல்ல திறமையும் வாய்க்கப் பெற்றவர்கள். அந்த வகையில் ப்ரீத்தாவும் ஒரு அழகான பெண்ணாகத்தான் இருந்து வருகிறார். அதனால் ப்ரீத்தாவுடன் ஹரியை சேர்த்து வைத்து பார்க்கும் பொழுது ரசிகர்கள் பெரும்பாலும் எப்படி இவரை போய் கல்யாணம் பண்ணாங்க என்றுதான் யோசிக்க வைக்கின்றது.

தேவயானி – ராஜகுமாரன்: 90களின் பிற்பகுதியில் இருந்து ஒரு முன்னணி நடிகையாக உருவான நடிகை தேவயானி. முதலில் சிவசக்தி என்ற படத்தில் ஒரு ஐட்டம் சாங் ஆடினார். அதன் பிறகு தொட்டாச்சிணுங்கி என்ற படத்தின் மூலம் நடிகையாக மாறினார் .ஆனால் அவருக்கு ஒரு முக்கிய அந்தஸ்தை பெற்றுத் தந்த படமாக அஜித் நடிப்பில் உருவான காதல் கோட்டை படம் அமைந்தது. அதன் பிறகு வரிசையாக சூரியவம்சம் , ஃப்ரெண்ட்ஸ் போன்ற பல படங்கள் அவருக்கு ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்தது. ஒரு நல்ல பீக்கில் இருக்கும்போதே தேவயானி பிரபல இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்கள் எதிர்ப்பை மீறியும் திருமணம் செய்து கொண்ட தேவயானி ராஜகுமாரன் தம்பதியினர் இப்போது மகிழ்ச்சியுடன் நிம்மதியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .ஆனால் அந்த நேரத்தில் அவர்களின் திருமணம் அவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது காரணம் தேவயானி மும்பையில் இருந்து வந்த ஒரு பெண் .ஒரு அழகான நல்ல நிறமுள்ள பெண் . அவர் போய் இப்படி ஒரு கணவரை தேர்ந்தெடுத்து இருக்கிறாரே என்று ரசிகர்கள் புலம்பி வந்தனர்.

ஸ்ரீதேவி போனி கபூர்: தமிழ் சினிமாவில் 80 90களில் தனது அழகாலும் திறமையாலும் ஒட்டுமொத்த சினிமாவையும் தன்வசம் ஆட்டி படைத்தவர் நடிகை ஸ்ரீதேவி. பெரும்பாலும் ரஜினி கமல் இவர்களுடன் நீயே ஜோடி சேர்ந்த ஸ்ரீதேவியை அந்த நேரத்திலேயே ரஜினியும் கமலும் திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஸ்ரீதேவியின் பெற்றோரிடமே நேரடியாக போய் கேட்டதாகவும் வதந்திகள் வந்தன ஆனால் ஸ்ரீதேவியின் அம்மாவோ பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூரை ஸ்ரீதேவிக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் அவர்கள் ஜோடியை பார்க்கும் போதும் ஸ்ரீதேவியின் ரசிகர்கள் பலரும் ஆதங்கப்பட்டதுண்டு.

நீலிமா ராணி இசைவாணன்: சின்ன திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி ஒரு முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை நீலிமா ராணி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் பல முன்னணி ஹீரோக்களுடன் மகளாகவும் நடித்திருக்கிறார். அதன் பிறகு நான் மகான் அல்ல படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் துணை நடிகையாகவே வலம் வந்தார் .ஒரு நல்ல தோழியாக ஒரு நல்ல தங்கையாக இந்த கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த நீலிமா ராணி சின்னத்திரையிலும் ஒரு முக்கியமான அந்தஸ்தை பெற்றார். நீலிமா ராணியும் சின்னத்திரையில் ஒரு முக்கியமான பொறுப்பில் இருந்த இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .ஆனால் இருவருக்கும் 10 வயது வித்தியாசம். அதனால் இவர்களை பார்க்கும்போதெல்லாம் நீலிமா ராணி இடமே “இவர் என்ன உங்கள் அப்பாவா? என கேட்டதாக பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

பிரியா அட்லீ : இருவருமே திரை துறையில் இருந்து வந்தவர்கள் தான் .அட்லீ ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய மனைவியான பிரியா கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர். சிங்கம் படத்திலும் அனுஷ்காவின் தங்கையாக நடித்தவர் .இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அட்லீ எந்த அளவுக்கு கருப்பாக இருக்கிறாரோ அதற்கு எதிர்மறையாக நல்ல கலருடன் இருப்பவர் அவருடைய மனைவி பிரியா. இந்த ஜோடியை பார்க்கும் போதும் அட்லீயை ரசிகர்கள் பலரும் கலாய்ப்பதுண்டு. நல்ல வாழுறான்டா என்று ஆரம்பத்தில் இந்த மாதிரியான விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறார் அட்லீ.
ஆனால் மேலே சொன்ன இந்த ஐந்து தம்பதிகளும் வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அவர்களுடைய திருமண வாழ்க்கையை நல்லபடியாகவே சந்தோஷமாகவும் நிம்மதியுடனும் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு ஆணும் பெண்ணும் இணைவதற்கு அழகோ நிறமோ தேவையில்லை என்பதற்கு இவர்கள் ஐந்து பேரும் ஒரு உதாரணமாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.