Connect with us
vijay

Cinema News

தங்கச்சியின் இழப்பு இருந்தாலும் விஜயின் அமைதிக்கு அது காரணம் இல்லையாம்.. டீச்சர் சொன்ன சீக்ரெட்

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக இருந்து வருபவர் நடிகர் விஜய். இன்று விஜய் சென்னை திருவான்மியூரில் மாணவர்களை சந்தித்து அவருடைய அறிவுரைகளை கூறி வருகிறார். பொது தேர்வில் 10, 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் நடந்து வருகிறது.

அதில் விஜய் கலந்து கொண்டு மாணவர்களை சந்தித்து தேவையான அறிவுரைகளையும் பரிசுகளையும் வழங்கி வருகிறார். அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வரும் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை நேரடியாக எதிர் கொள்ள இருக்கிறார். ஒரு பக்கம் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் விஜய். விஜய் என்றாலே அமைதி என்று தான் அனைவரும் கூறுவார்கள்.

இதையும் படிங்க: ஒரே டார்ச்சர்!. இனிமே யார் கேட்டாலும் ‘நோ’ தான்!.. கடுப்பான விஜய் சேதுபதி!..

படப்பிடிப்பிலும் சரி வீட்டிலும் சரி பொது இடங்களிலும் சரி எங்கு பார்த்தாலும் பார்ப்பதற்கு விஜய் அமைதியாகவே தான் இருப்பார். அவருடன் நடித்த சக நடிகர்களும் ஷாட் முடிந்ததும் விஜய் ஓரமாக போய் உட்கார்ந்து விடுவார், யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார் என்று சொல்வதை தான் நாம் கேட்டிருக்கிறோம். இப்படி அமைதியாகவே இருக்கும் விஜய் அரசியலை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற ஒரு கருத்து அனைவரின் மத்தியிலும் இருந்து வருகிறது.

இப்படி விஜய் இந்த அளவு அமைதியாக இருப்பதற்கு காரணம் சிறு வயதில் அவருடைய தங்கை இறந்த செய்தி தாங்க முடியாமல் தான் அமைதியாக இருந்து விட்டார் என்று அவருடைய தாய் ஷோபா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய் பற்றி அவருடைய பள்ளி ஆசிரியை ஒருவர் கூறிய தகவல் இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் அவருடைய தங்கை வித்யா மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தாராம். அது மட்டும் இல்லாமல் விஜய் நன்கு கிட்டார் வாசிப்பவரும் கூட என அந்த பள்ளி ஆசிரியை கூறினார். அதுபோக ஓவியமும் நன்றாக வரைவாராம். ஆனால் அவருடைய தங்கை மரணத்திற்கு பிறகு எல்லாவற்றையும் நிறுத்திவிட்டாராம் விஜய். இன்னொரு பக்கம் மகள் இருந்த சோகம் தாங்க முடியாமல் அவருடைய அப்பாவும் அம்மாவும் வீட்டில் பெரும் அதிர்ச்சியில் இருந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கல்கி படத்துல அதென்ன 2898? என்ன தான் சொல்ல வர்றாங்க? பிரபலம் தகவல்

அதனால் விஜய் யாரும் இல்லாமல் தனியாக மிகவும் கஷ்டப்பட்டு இருந்திருக்கிறார். அவருடைய அம்மா அப்பாவும் விஜய்க்கு ஆறுதல் சொல்லாமல் சோகத்திலேயே மூழ்கி இருந்ததனால் விஜய் தனியாகவே இருந்திருக்கிறார். இதுதான் விஜயின் அமைதிக்கு காரணம் என அந்த பள்ளி ஆசிரியை கூறினார்.

 

 

google news
Continue Reading

More in Cinema News

To Top