எல்லாமே வதந்தி!..தளபதி 67 ரியல் கதை இதுதானாம்!..அட இது மாஸ் கதையாச்சே!…

Published on: December 6, 2022
lokesh
---Advertisement---

பீஸ்ட் படத்திற்கு பின் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு பின் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படம் அவருக்கு 67வது திரைப்படமாகும். இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் மிகவும் எளிமையாக நடந்தது. விக்ரம் மெகா ஹிட்டுக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

lokesh
lokesh

இந்நிலையில், இப்படத்தின் கதை பற்றிய சில விஷயங்கள் வெளியே கசிந்துள்ளது. உண்மையில் History of violence என்கிற ஆங்கில படத்தின் தழுவல்தான் இப்படம் எனவும், இரண்டரை கோடி ரூபாய்க்கு இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியே இப்படம் உருவாக்கப்படுவதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

A History of Violence
A History of Violence

இதுவும் ஒரு பாட்ஷா டைப் ஆக்‌ஷன் படம்தான். விஜய் மனைவி குழந்தைகளுடன் அமைதியாக வசித்து வருகிறார். அவர் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார். அப்போது அங்கு பிரச்சனை ஏற்படுகிறது. அப்போது விஜய் விஸ்வரூபம் எடுக்கிறார்.

அதன்பின் பிளாஷ்பேக்கில் அவர் என்னவாக இருந்தார் என காட்டப்படுகிறது. இறுதியில் வில்லனை அவர் எப்படி அழித்தார் என்பதே கதை. இப்படத்தில் விஜய் ஒரு 50 வயது நபராக நடிக்கவுள்ளாராம். பிளாஷ் பேக்கில் அவர் இளமையாக வருவதற்கு வாய்ப்புண்டு எனக்கூறப்படுகிறது.

simbu_main_cine
vijay

History of violence படத்தில் ஹீரோவின் அண்ணனே வில்லனாக இருப்பார். இதில், லோகேஷ் எப்படி கதையமைத்துள்ளார் என்பது போக போகத்தான் தெரியவரும். இப்படத்தில் அர்ஜூன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். அதேபோல், இப்படத்தில் வில்லன்களில் ஒருவராக விஷால் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பழச எல்லாம் தூசு தட்டி எடுக்கும் தமிழ் சினிமா!.. ரி ரிலீஸில் ரஜினிக்கு அடுத்த படியாக அஜித்!.. என்ன படம் தெரியுமா?..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.