More
Categories: Cinema News latest news

பாதாளத்தில் கிடந்த ராஜ்கமல் நிறுவனத்தை தூக்கி நிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்!.. யாருப்பா அவரு?..

ஒரு நேரத்தில் சினிமாவில் கமல் ஆதிக்கம் முடிந்து விட்டதா? என்று எண்ணிய ரசிகர்களுக்கு பெரிய கரி விருந்து படையல் போட்ட மாதிரி வந்து அமைந்தது ‘விக்ரம்’ படம். கிட்டத்தட்ட விஸ்வரூபம் படம் வெளியாகி 4 வருடங்கள் கழித்து கமல் நடிப்பில் வெளிவந்த படம் தான் விக்ரம்.

kamal1

விக்ரம் பட வெற்றி ஒரு காரணம்

Advertising
Advertising

ஒரு வேளை அந்த படம் வேறு யாராவது இயக்கியிருந்தால் இந்த அளவு வெற்றி பெற்றிருக்குமா? என்பது சந்தேகம் தான். ஒரு ஃபேன் பாயாக கமலுக்கே ட்ரீட் வைக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தால் லோகேஷ் ஒரு அற்புதமான படைப்பை கொடுத்து இந்திய சினிமாவையே மிரள வைத்தார்.

விக்ரம் படத்தின் வெற்றி தான் இந்தியன் 2 படப்பிடிப்பை வேகமாக முடுக்கி விட்டது. அதுவரைக்கும் இந்தியன் 2 படம் தூங்கி கொண்டிருக்க விக்ரமின் வெற்றி உசுப்பேத்தியிருக்கிறது.இப்போது விறுவிறுப்பாக அந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருக்கிறது.

kamal2

முனைப்புடன் ராஜ்கமல் நிறுவனம்

மறுபுறம் கமலின் ராஜ்கமல் நிறுவனம் ஏராளமான படங்களை தயாரித்திருந்தாலும் வெளி நடிகர்களை வைத்து 4 படங்கள் தான் தயாரித்திருக்கிறதாம். மற்ற படங்கள் எல்லாமே கமலின் நடிப்பில் வெளிவந்த படங்களாம். ஆகவே அது பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தது. அதுவரைக்கும் ராஜ்கமல் நிறுவனத்தை கமலின் சகோதரரான சாருஹாசன் தான் நிர்வகித்து வந்தாராம்.

ஆனால் சமீபகாலமாக கமலின் ராஜ்கமல் நிறுவனம் தலையோங்கி நிற்கின்றது. சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம், சிம்புவின் நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், அடுத்ததாக விக்னேஷ் சிவன், பிரதீப் ரெங்கநாதன் கூட்டணியில் ஒரு படம் என பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்க முனைப்பு காட்டிக் கொண்டிருக்கிறது.

kamal mahendran

காரணமான நபர்

கிட்டத்தட்ட லைக்கா, ஏஜிஎஸ் போன்ற நிறுவனங்களையே ராஜ்கமல் நிறுவனம் ஓவர் டேக் செய்து விடும் போலிருக்கிறது. இப்படி அந்த நிறுவனத்தை ஊரறிய செய்தது ராஜ்கமல் நிறுவனத்தில் மற்றுமொரு தயாரிப்பாளராக இருக்கும் மகேந்திரன் என்பவரால் தான் என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க : இந்திய சினிமாவை உலக அரங்கில் பெருமைப்படுத்திய இரண்டு படைப்புகள்… ஆஸ்கர் முழு லிஸ்ட் இதோ…

அவர் வந்த பிறகு தான் அவரின் சில ஆலோசனைகளை ஏற்று கமலும் மிகவும் கவனமாக அந்த நிறுவனத்தை கையாண்டு வருகிறார் என்றும் சித்ரா லட்சுமணன் கூறினார்.

Published by
Rohini

Recent Posts