வாரிசு மேடையில் அரசியல் பேசாத விஜய்!.. காரணமாக இருந்த பிரபல அரசியல் பிரமுகர்?..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவிற்கு வெளியுலக பிரபலங்கள் அந்த அளவுக்கு கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் பேசப்பட்டு வருகிறது.
படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் விஜயின் நெருங்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கு முன்னாடி நடந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் எந்த அளவுக்கு விஜய் அப்செட்டாக இருந்தாரோ அதற்கு நேர் எதிராக செம ஹேப்பி மூடில் ரசிகர்களை வாரிசு இசை வெளியீட்டு விழாவில் இருந்தார். யாருமே எதிர்பாராத அளவிற்கு எனர்ஜியாக காட்சியளித்தார்.
இதையும் படிங்க : இந்த மூஞ்சிலாம் ஹீரோவா?.. கலாய்த்த படக்குழு.. வீட்டில் கதறி அழுத விஜய்…
இந்த விழாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஷயங்கள் துணிவை பற்றியும் அரசியல் பற்றியும் பேசுவார் என்று. ஆனால் அந்த மாதிரி எதுவுமே நடக்க வில்லை. ஆனால் ஒரு குட்டி ஸ்டோரி என்ற தலைப்பில் மறைமுகமாக அஜித்தை பற்றி மட்டும் பேசினார் என்று தெரிகிறது. ஆனால் அரசியல் பற்றி பேசாததற்கு அவருக்கு இருக்கும் மெச்சூரிட்டி என்று சொல்லப்படுகிறது.
இதற்கு காரணமாக இருப்பது ஒரு பிரபல அரசியல் பிரமுகர் என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார். அவர் கூறியதாவது: சமீபத்தில் விஜய் ஒரு அரசியல் பிரமுகரிடம் ஆலோசனை பெற்றதாக கூறியிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த அரசியல் பிரமுகர் ஒரு சொற்பொழிவாளர் மற்றும் பல புத்தகங்களை எழுதியவராம். மேலும் நன்றாக படித்தவரும் ஆவாராம்.
இதையும் படிங்க : சாவித்திரியை பார்க்க இவர்தான் அனுமதி கொடுக்கனுமாம்… ஜெமினி கணேசனாலயே முடியாதாம்… என்னப்பா சொல்றீங்க!!
அவருக்கு ஒரு ராஜ மரியாதை அளித்து விஜய் அவரை சந்தித்தாராம். சந்தித்த மாத்திரத்தில் விஜய்க்கு அந்த அரசியல் பிரமுகர் சில விஷயங்களை புரஜக்டர் மூலமாக போட்டு காண்பித்துள்ளாராம். அதை பார்த்த விஜய் மிரண்டும் போயிருக்கிறாராம். அதனால் அந்த அரசியல் பிரமுகர் சொல்லி தான் இப்பொழுது அரசியல் பற்றி பேசவேண்டாம், வாரிசு படத்தை மட்டும் பற்றி பேசினால் போதும் என்று சொல்லியிருப்பார். என்று செய்யாறு பாலு கூறினார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பேசிக்கலாம். அந்த சமயத்திலும் பேசாவிட்டால் ரஜினியின் நிலைமை தான் வரும் என்று அறிந்தேஇப்பொழுது எதுவும் பேசவில்லை என்றும் செய்யாறு பாலு தெரிவித்தார்.