நாலு பேர் நாலு விதமா பேசுனதுனால வந்த விரக்தி… அஜித் பத்திரிக்கை பேட்டிகளை மறுப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

by Arun Prasad |
Ajith Kumar
X

Ajith Kumar

நடிகர் அஜித்குமார், “அசல்” திரைப்படத்திற்கு பிறகு பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொண்டே வருகிறார். தனது திரைப்படங்களின் புரோமோஷன் பணிகளிலும் கூட அவர் ஈடுபடுவதில்லை.

எனினும் “துணிவு” திரைப்படத்தின் புரோமோஷனில் அஜித்குமார் நிச்சயமாக கலந்துகொள்வார் என கூறப்பட்டது. இந்த தகவலால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தார்கள். ஆனால் இந்த முறையும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதே.

Ajith Kumar

Ajith Kumar

அஜித் சில ஆண்டுகளுக்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் பேட்டியளித்திருக்கிறார். ஆனாலும் மிக நேர்த்தியாகவும் தேவையான சொற்களை பயன்படுத்தியே பதிலளிப்பார். இந்த நிலையில் அஜித் ஏன் இவ்வாறு பத்திரிக்கை பேட்டிகளை தவிர்க்கிறார் என்பது குறித்து ஒரு முக்கிய தகவலை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

அஜித்குமார் ஒரு பத்திரிக்கை பேட்டியில் கலந்துகொண்டபோது “என்னை பொறுத்தவரைக்கும் நான் எந்த சினிமா பின்புலத்தில் இருந்தும் நான் சினிமாவுக்கு வரவில்லை. சினிமாவில் யாருடன் எப்படி பழகவேண்டும் என்பதே எனக்கு தெரியாது. ஆரம்பத்தில் தமிழ் பேச நான் கொஞ்சம் தடுமாறினேன்.

Ajith Kumar

Ajith Kumar

‘நடிக்கிறது தமிழ்ப்படம், ஆனா இவருக்கு தமிழே பேசத்தெரியலையே” என்றார்கள். ஆதலால் தமிழில் பேசுவதை தவிர்த்துவிட்டு பொது மேடைகளில் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினேன். ‘என்ன திமிர் பாத்தீங்களா, ஆங்கிலத்தில் பேசுகிறார்’ என்று விமர்சித்தார்கள்.

எதுக்கு பேசனும், பேசாமயே இருந்துடலாம் என்று இருந்தேன். ‘திமிரப்பாருங்கய்யா, ஒரு வார்த்தை பேசுறானான்னு பாருங்க’ என கூறினார்கள். அதன் பிறகு மீண்டும் நன்றாக பேசத்தொடங்கினேன். ‘எக்கச்சக்கமா பேசுறான்யா இவன்’ என்றார்கள்.

Ajith Kumar

Ajith Kumar

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அதன் பிறகுதான் எனது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். அந்த வழியிலேதான் இப்போது சென்றுக்கொண்டு இருக்கிறேன்” என்று தான் எடுத்த முடிவை குறித்து பகிர்ந்துகொண்டாராம். ஆதலால்தான் பத்திரிக்கை பேட்டிகளில் அஜித் கலந்துக்கொள்ள மறுக்கிறார் போல.

இதையும் படிங்க: டிரைலர்லயே இவ்வளவு முத்தக்காட்சி இருக்குன்னா… அப்போ படத்துல?… கிளாமரில் துள்ளி விளையாடும் குட்டி நயன்தாரா…

Next Story