ஷூட்டிங் ஸ்பாட்டில் கொந்தளித்த தனுஷ்??... சொந்தக்காசில் டிக்கெட் போட்டு சென்னைக்கு திரும்பினாரா?? என்னவா இருக்கும்!!
தனுஷ் நடிக்க இருக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசி பகுதியில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தனுஷ், இத்திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு கோபமாக வெளியேறிவிட்டார் என்று ஒரு தகவல் இணையத்தில் பரவி வந்தது. இந்த நிலையில் இது குறித்தான உண்மையான பின்னணி தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது தனுஷ் படப்பிடிப்பிற்குச் சென்றபோது அவர் நடிக்க இருக்கும் காட்சிகளுக்கான செட் ஒர்க்குகள் முழுவதுமாக முடிவடையவில்லையாம். அந்த செட் பணிகள் முடிவடைவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என படக்குழுவினர் கூறியிருக்கின்றனர். ஆதலால் அந்த இரண்டு நாட்களும் அங்கே காத்திருக்க வேண்டாம் என நினைத்த தனுஷ் தனது சொந்த செலவில் விமான டிக்கெட் போட்டுச் சென்னைக்கு திரும்பியிருக்கிறார்.
இதையும் படிங்க: இது மட்டும் நடக்கலைன்னா விஜய் ஆண்டனிக்கு இந்த நிலைமை வந்திருக்கவே வந்திருக்காது… எல்லாம் நேரம்தான் போல…
தனுஷ் தனது சொந்த காசில் திரும்பியிருக்கிறார் என்றால் அந்த படப்பிடிப்புத் தளத்தில் ஏதோ களேபரங்கள் நடந்திருக்கும் என்று பலரும் நினைத்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் தனுஷின் 50 ஆவது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அத்திரைப்படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் போடப்பட்டதாம். தனுஷ் இந்த பூஜையில் கலந்துகொள்வதற்காகத்தான் சென்னை வந்தார் என்றும் கூறப்படுகிறது.