டான் பட இயக்குனர் செய்த காரியத்தால் கைவிட்டுப்போன ரஜினி பட வாய்ப்பு… என்னவா இருக்கும்??

Rajinikanth and Cibi Chakravarthy
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவ ராஜ்குமார், தமன்னா, சுனில், வசந்த் ரவி, விநாயகன் என பலரும் நடித்து வருகின்றனர்.

Jailer
“ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், “டான்” படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளிவந்தது. ஓரளவு அத்தகவல் உறுதியான தகவலாகத்தான் இருந்தது. ஆனால் சில காரணங்களால் சிபி சக்ரவர்த்தி ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்தன.

Cibi Chakravarthy
இதனை தொடர்ந்து “லவ் டூடே” இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கப்போவதாகவும் ஒரு தகவல் வந்தது. ஆனால் அது உறுதியான தகவல் இல்லை என தெரியவந்தது. அதன் பின் சில நாட்களுக்கு முன்பு ‘ஜெய் பீம்” இயக்குனர் தா.செ.ஞானவேலிடம் ரஜினிகாந்த் கதை கேட்டுள்ளதாக கூறப்பட்டது. எனினும் இது குறித்த மேலதிக தகவல் எதுவும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை சிபி சக்ரவர்த்தி எப்படி தவறவிட்டார் என்பது குறித்தான ஒரு முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: ஒரு பாட்டுக்காக இப்படி உயிரையே பணயம் வைக்குறதா?? கொழுந்துவிட்டு எரிந்த தீயில் இருந்து உடல் கருகி வெளிவந்த ஸ்ரீகாந்த்…

Vijayendra Prasad
அதாவது சிபி சக்ரவர்த்தி ரஜினியை வைத்து இயக்குவதாக முடிவானபோது அத்திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் “பாகுபலி” கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் கூறிய காட்சிகள் சிபி சக்ரவர்த்திக்கு திருப்தியாக இல்லையாம்.
ஆதலால் அந்த காட்சிகளை வைக்க மறுப்புத் தெரிவித்திருக்கிறார் சிபி சக்ரவர்த்தி. ஆதலால்தான் ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பை சிபி சக்ரவர்த்தி தவறவிட்டதாக ஒரு தகவல் வெளிவருகிறது.