More
Categories: Cinema News latest news

கபாலிடா!.. இந்த பஞ்ச் டையலாக்கிற்கு பின்னாடி இருக்கும் ரகசியம்..

சினிமாவில் முதன் முதலில் 1975 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தவர் ரஜினிகாந்த். கே பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் அதன் பிறகு படிப்படியாக வில்லன், துணை நடிகர் ,இரண்டாம் நடிகர், நாயகன் ,நட்சத்திரம் ,பெரிய நட்சத்திரம் ,உச்ச நட்சத்திரம் என எல்லை தாண்டி தனது வளர்ச்சியை பதிவு செய்தார் ரஜினிகாந்த்.

தற்போது இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக ரஜினி திகழ்ந்து வருகிறார். எப்பொழுதுமே ஸ்டைலுக்கு என்று ரஜினியை குறிப்பிட்டு சொல்லும் ரசிகர்களும் சரி மற்ற பிரபலங்களும் சரி திரையுலகங்களும் சரி என்றைக்காவது அவரின் நடிப்பை பற்றி பாராட்டியது என்பது மிகவும் குறைவே . இது பற்றி சமீபத்தில் பேசிய அமீர் கூட ரஜினி நடித்த ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் போன்ற படங்களுக்கு ரஜினிக்கு சிறந்த நடிகர் என்ற விருதை கொடுத்தார்களா என கேட்டிருந்தார்,

Advertising
Advertising

நடிப்பிற்கும் சிவாஜி, கமல் என்று சொல்லும் நாம் ரஜினியும் ஒரு சிறந்த நடிகர் என்றுதான் நாம் உச்சரித்துக் கொண்டு இருக்கிறோம். அவருடைய நடிப்புத் திறன் போதுமான அளவு அனைத்து தரப்பினராலும் உள்வாங்கப்படவில்லை. அவருடைய நடிப்பிற்கு எத்தனையோ படங்கள் அவர் நடித்திருக்கிறார். கொஞ்சம் கூடுதலாக கவனித்தால் ரஜினி நடித்த மூன்று முடிச்சு, அவர்கள் அவள் அப்படித்தான், புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்களையும் நாம் கவனிக்க வேண்டும்.

காதல் மன்னனாக, குடும்ப பாங்கான கணவனாக ,நகைச்சுவை மன்னனாக என எல்லா கதாபாத்திரங்களிலும் ரஜினியின் நடிப்பு அபாரமானது. இப்படி ரஜினியை பற்றி ஏராளமான கருத்துக்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு ரஜினியை பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து இருக்கிறார். அதாவது ரஜினி நடித்த கபாலி என்ற படத்தை தாணு தான் தயாரித்து இருந்தார் .அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ரஜினிக்கு கடுமையான ஜுரம் ஏற்பட்டதாம் .

அந்த நேரத்தில் ரஜினி பேசும் கபாலிடா என்ற பஞ்ச் டயலாக் கூடிய அந்த காட்சியை எடுக்க வேண்டி இருந்ததாம். அப்போது தாணு ரஜினியிடம் “நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் .படப்பிடிப்பு இன்றைக்கு வேண்டாம்” என சொன்னாராம் .ஆனால் ரஜினி அதையும் மீறி “பரவாயில்லை நான் ந டித்துக் கொடுத்துவிட்டு போகிறேன்” என்று அந்த பஞ்ச் டயலாக்கை பேசிவிட்டு சென்றாராம் .இதை ஒரு பேட்டியில் தாணு தெரிவித்தார்.

இதையும் படிங்க : வாய்ப்புக்கு உதவியவரின் உடலை சுமந்த எம்.ஜி.ஆர்!.. அட அந்த நடிகரா?!….

Published by
Rohini