இப்படி ஒரு வயித்தெறிச்சலா?.. குக் வித் கோமாளி மணிமேகலை வெளியேற காரணமாக இருந்த சம்பவம்!..
சன் மியூசில் கிட்டத்தட்ட 10 வருடங்களாக தொகுப்பாளராக பணிபுரிந்தவர் தொகுப்பாளினி மணிமேகலை. இவர் தொகுத்து வழங்குவதில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன் மூலம் இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். இவருடன் சேர்ந்து அஞ்சனாவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
அப்போது இருவர் மட்டுமே இந்த தொலைக்காட்சியில் டாப்பில் இருந்தனர். திடீரென மணிமேகலை டான்சரான ஹுசைனை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து சன் மியூஸிக்கிற்கு முழுக்கு போட்டார். சில காலம் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்காதவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரீ என்ரி கொடுத்தார்.
அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த மணிமேகலையை அனைவரும் விரும்ப இந்த சீசன் வரைக்கும் கோமாளியாகவே வந்து கொண்டிருந்தார். ஆனால் அவருடைய ஆசையோ ஆங்கராக வேண்டும் என்பது தான். சரி எப்பொழுதாவது அந்த வாய்ப்பு வரும் என எதிர்பார்த்த மணிமேகலைக்கு இதுவரை ஆங்கராக எந்த நிகழ்ச்சியையும் விஜய் தொலைக்காட்சி தரவில்லை.
குக் வித் கோமாளியின் தற்போதைய சீசனாவதில் ஆங்கர் வாய்ப்பு வரும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் இந்த தடவையும் கோமாளியாகவே வந்தார் மணிமேகலை. ஆனால் இதற்கு முந்தைய சீசனில் மணிமேகலையுடன் கோமாளியாக இருந்த சிவாங்கி இந்த சீசனில் குக் காக கலந்து கொண்டு போட்டியாளராக மாறிவிட்டார்.
இதையும் படிங்க : ஒரே படம்.. ஓஹோனு வாழ்க்கை!.. ரவுண்ட் கட்டும் கோடம்பாக்கம்!.. அதிரடியான அடுத்த அப்டேட்..
ஆனால் மணிமேகலை இன்னும் கோமாளியாகவே இருக்கிறார். இதுவும் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணமாக இருக்கலாம் என்று கூறிவருகின்றனர். ஆனால் மணிமேகலை ஏற்கெனவே ஏராளமான ரசிகர்களை வைத்திருப்பதால் எப்படியாவது அவருக்கு ஆங்கர் வாய்ப்பு கொடுங்கள் என சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.