எம்.ஜி.ஆரும் சிவாஜியும் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்போடு பழகி வந்திருந்தாலும் அவர்களது திரைப்படங்கள் வணிக ரீதியாக போட்டி போட்டன என்பது மட்டும் நிதர்சனம். ரஜினி-கமல், விஜய்-அஜித் போலவே அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்-சிவாஜி திரைப்படங்கள் வணிக ரீதியாக மோதிக்கொண்டன என்றுதான் கூறவேண்டும்.
ரஜினி-கமல் ஆகியோர் வணிக ரீதியாக போட்டி நடிகர்களாக இருந்தாலும் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 16 திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்ததோ “கூண்டுக்கிளி” என்ற ஒரே திரைப்படம்தான்.
இந்த நிலையில் “கூண்டுக்கிளி” திரைப்படத்தை தொடர்ந்து எம்.ஜி.ஆரும் சிவாஜியும் ஏன் அடுத்தடுத்த திரைப்படங்களில் இணைந்து நடிக்கவில்லை என்பது குறித்த ஒரு தகவலை பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆர்-சிவாஜி இணைந்து நடித்த “கூண்டுக்கிளி” திரைப்படம் 1954 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை பழம்பெரும் நடிகையான டி.ஆர்.ராஜகுமாரி தயாரித்திருந்தார். டி.ஆர்.ராமண்ணா இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இதையும் படிங்க: சிவாஜி கணேசனை காப்பி அடிக்காத ஒரே நடிகன் இவன்தான்… பாலச்சந்தர் யாரை சொன்னார்ன்னு தெரியுமா??
எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகிய இரு ஜாம்பவான்கள் இணைந்து நடித்திருந்தும் இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக படுதோல்வியடைந்த திரைப்படமாக அமைந்தது. எனினும் இத்திரைப்படத்தில் இரண்டு டாப் நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்ததால் இத்திரைப்படம் காலத்தை தாண்டியும் பேசப்பட்டு வருகிறது.
“கூண்டுக்கிளி” திரைப்படத்தை தொடர்ந்து எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடிக்காததற்கு அத்திரைப்படம் தோல்வியடைந்ததே காரணம் என சித்ரா லட்சுமணன் தனது வீடியோவில் கூறியிருந்தார். மேலும் அவர் “கூண்டுக்கிளி” திரைப்படம் ஒரு வேளை வெற்றிப்பெற்றிருந்தால் அவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருப்பார்கள்” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…