More
Categories: Cinema News latest news

குடிப்பழக்கத்தால் வந்த வியாதி!.. ரோபோ சங்கர் மெலிந்து போனதற்கு காரணம் இதுதான்!…

மிமிக்ரி கலைஞராக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரோபோ சங்கர். பல மேடைகளில் இவர் கலந்து கொண்டு மிமிக்ரி செய்துள்ளார். விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகம் பிரபலமானார். நல்ல கட்டுமஸ்தான உடலை கொண்டவர் இவர். தீவிர கமல் ரசிகரான ரோபோ சங்கர் ஆளவந்தான் படத்தை பார்த்து அதில் வரும் கமலை போல உடம்பை ஏற்றியிருக்கிறார்.

டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ரோபோ சங்கருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. அதைப்பயன்படுத்தி அவரும் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு நெருக்கமானார். ஆனால், திடீரென உடல் எடை குறைந்து மெலிதான தோற்றத்துக்கு மாறிய அவரின் புகைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சி? ஏன் இப்படி இளைத்து போனார்? என சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பேச துவங்கினர். எனவே, இதுபற்றி விளக்கமளித்த அவரின் மனைவிஒரு திரைப்படத்திற்காக இப்படி உடலை இளைத்துள்ளார் என விளக்கமளித்தார்.

Advertising
Advertising

ஆனால், அவர் சொன்னதில் உண்மையில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது. ரோபோ சங்கருக்கு பல வருடங்களாகவே மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அதோடு, அசைவ உணவுகளையும் கட்டுப்பாடின்றி சாப்பிட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது. இதில், சோகம் என்னவெனில் ஆறு மாதமாக அவரின் உடலில் மஞ்சள் காமாலை இருந்துள்ளது அவருக்கே தெரியவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பியவருக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவரின் உடலை சோதிக்கப்பட்டபோதுதான் இந்த உண்மை அவரின் குடும்பத்தினருக்கே தெரியவந்துள்ளது. கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வந்துள்ளது.

அதன் காரணமாகத்தான் அவரின் உடல் உடையும் குறைந்துள்ளது. இதில் நல்ல விஷயம் என்னவெனில் கடந்த ஆறு மாதங்களாக ரோபோ சங்கர் மது அருந்துவதை விட்டுள்ளார். அதுதான் அவரின் உயிரையும் தற்போது காப்பாற்றியுள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் மருத்துவரின் கண்காணிப்பில்தான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா

Recent Posts