Cinema History
முத்துராமன் சாவுக்கு காரணமான அந்த ஒரு விஷயம்! பிரபலம் சொன்ன பகீர் தகவல்
தமிழ் சினிமாவில் மனதில் நின்ற நடிகர்களின் பட்டியலில் இவருக்கும் முக்கியமான பங்கு உண்டு. ஆம் அவர்தான் நடிகர் முத்துராமன். ஆங்கில நடிகர்களை போல ஒரு தோற்றம், சிவாஜியை மிஞ்சும் நடிப்பு என முத்துராமன் வந்த புதிதில் அனைவரும் அவரை கொண்டாடினார்கள். ஏனெனில் சிவாஜியிடம் ஓவர் ஆக்ட்டிங் காணப்பட்டது. ஆனால் முத்துராமனிடம் எதார்த்தமான நடிப்பு அதுவும் அனைவருக்கும் பிடித்தமான நடிப்பாக காணப்பட்டது.
நெஞ்சில் ஒர் ஆலயம் படம் தான் முத்துராமனுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தப் படமாக அமைந்தது. அதுவும் அந்தப் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தாலும் ஆணழகனைப் போல இருந்ததனால் அவர் மீது ஒரு தனி ஈர்ப்பு இருந்தது.
இதையும் படிங்க : யாருக்கும் தெரியாமல் மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! – ஷாக் கொடுத்த வனிதா விஜயகுமார்..
ஸ்ரீதரின் வாய்ப்பு முத்துராமனுக்கு தொடர்ந்து கிடைக்க அவரை ஒரு முதன்மை நடிகராக மாற்றியது. மேலும் அந்தக் கால நடிகைகளின் ஜெண்டில்மேனாகவும் முத்துராமன் திகழ்ந்து வந்தார். எந்த நடிகைகளிடமும் கிசுகிசுக்கில் சிக்காதவர் முத்துராமன்.
எம்.ஜி.ஆர். நடித்த அரசிளங்குமாரி படத்தில் ‘ஏற்றமுன்னா ஏற்றம்..’ என்ற பாடலில் வருவார் முத்துராமன். ஆனால் அது முத்துராமன் என்று அப்பொழுது யாருக்கும் தெரியாது. அவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த போதுதான் அரசிளங்குமாரி படத்தில் நடித்தது முத்துராமனா என்று யோசிக்க வைத்தது.
முத்துராமன் கடைசி வரை எந்தக் கெட்ட பெயரும் வாங்காமல் வாழ்ந்து வந்தார். பல படங்களில் பெரும்பாலும் இரண்டாவது கதா நாயகனாகவே நடித்தார் முத்துராமன். யாரிடமும் எந்த ஒரு விவாதமும் கொள்ளாதவர். சூரியகாந்தி படம் முழுவதுமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். அதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஜெயலலிதா. அவருக்கு ஜோடியாக முத்துராமன் நடித்திருப்பார்.
அப்போது டைட்டில் கார்டில் என் பெயர்தான் முதலில் போட வேண்டும் என ஜெயலலிதா வாக்குவாதம் பண்ணினாராம். ஆனால் முத்துராமன் யார் பெயர் போட்டால் என்ன? ஏன் என் பெயர் போடலைனாலும் பரவாயில்லை என்று பெருமிதத்தோடு கூறினாராம்.இந்த நிலையில் கமல் நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்த சங்கர்லால் படத்தில் கலந்து கொள்வதற்காக முத்துராமன் ஊட்டிக்கு சென்றிருக்கிறார்.
இதையும் படிங்க : எல்லாமே உண்மைதான் – பிக்பாஸ் போனதுக்கு காரணமே இதுதானா? வெளிச்சத்துக்கு வந்த விக்ரமனின் உண்மை முகம்
அப்போது காலையில் ஜாக்கிங் போவாராம் முத்துராமன். அப்போது போன சமயத்தில் தான் மயங்கி விழுந்து அவர் இறந்திருக்கிறார். இதற்கு காரணம் அந்த ஜாக்கிங் தான் என்று பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜ் கூறினார். உடற்பயிற்சி அதுவும் மலைப்பகுதியில் ஆக்ஸிஜன் குறைவாகவே இருக்கும். அங்கு போய் ஜாக்கிங் போனால் சரியா வருமா? அதுதான் முத்துராமன் மறைவிற்கு முதற்காரணம் என்று கூறினார்.