கணவனே கண்கண்ட தெய்வமாக இருந்த விஜயகுமாரி!.. எஸ்.எஸ்.ஆரை பிரிய காரணம் இதுதானா?..

by Rohini |   ( Updated:2022-12-26 10:53:19  )
vijaya_main_cine
X

vijayakumari

தமிழ் சினிமாவில் அந்த காலங்களில் பல முன்னனி நடிகைகள் இருந்திருந்தாலும் இலச்சிய நடிகையாக வாழ்ந்தவர் நடிகை விஜயகுமாரி. நடிப்பில் மிகப்பெரிய சாதனையை செய்து காட்டியவர் விஜயகுமாரி. எப்படி சிவாஜிக்கு பராசக்தி படத்தில் வரும் வசனம் பெருமையை வாங்கிக் கொடுத்ததோ அதே போல தான் விஜயகுமாரிக்கும் பூம்புகார் படத்தில் அவர் பேசும் வசனம் மிகப்பெரிய புகழை பெற்றுத் தந்தது.

vijaya1_cine

vijayakumari

ஆனால் இரண்டுமே மு.கருணாநிதி எழுதிய வசனங்களாகும். சினிமாவிற்குள் வருவதற்கு முன்னரே விஜயகுமாரி எம்ஜிஆரின் தீவிர ரசிகையாக இருந்திருக்கிறார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தன் ஆசையை வீட்டில் சொல்ல முதலில் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றது.

அதன் பிறகு அவர் ஜாதகத்தில் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகையாக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியதால் சம்மதித்திருக்கின்றனர். அதன் காரணமாகவே படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த முதல் படம் குலதெய்வம். நடித்த முதல் படத்திலேயே வருங்கால கணவரை தேர்ந்தெடுத்தார்.

இதையும் படிங்க : எனக்கு ஹீரோயின் இந்த நடிகையா?.. எம்ஜிஆர் நடிக்க மறுத்த நடிகை யார் தெரியுமா?..

ஆம் அந்த படத்தில் விஜயகுமாரிக்கு ஜோடியாக எஸ்.எஸ்.ஆர் தான் ஹீரோ. எஸ்.எஸ்.ஆருக்கும் பார்த்ததும் விஜயகுமாரியை பிடித்து போக காலப்போக்கில் திருமணத்தில் முடிந்தது. கல்யாணத்திற்கும் பிறகும் இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் கணவர் சொல்வதே மந்திரம் என்றே தன் வாழ்க்கையை பயணித்திருக்கிறார் விஜயகுமாரி.

vijaya2_cine

vijayakumari

ஒரு கட்டத்தில் விஜயகுமாரி ஹீரோயின் என்றால் நான் தான் ஹீரோ என்றெல்லாம் கறார் காட்ட ஆரம்பித்திருக்கிறார் எஸ்.எஸ்.ஆர். அதன் காரணமாகவே மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த ‘கற்பகம்’ படத்தில் நடிக்க விஜயகுமாரியால் முடியாமல் போனது. அதன் பின் அந்த கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

இதையும் படிங்க : “உனக்கு இசைன்னா என்னன்னு தெரியுமாடா??”… கங்கை அமரனை கண்டபடி பேசிய இளையராஜா…

இதே போல் வெற்றிக்காவியமாக நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் வாய்ப்பும் பறிபோனது. இதற்கு காரணமும் அவரது கணவர் தான். என்னவெனில் இயக்குனர் ஸ்ரீதர் விஜயகுமாரியை மனதில் வைத்தே இந்த படத்திற்கான கதையை எழுதியிருக்கிறார். அவரிடம் போய் சொன்னதும் என் கணவரிடம் ஒரு வார்த்தை கேட்டு சொல்கிறேன் என்று விஜயகுமாரி கூறியிருக்கிறார்.

mgr4_cine

vijayakumari mgr

ஆனால் எஸ்.எஸ்.ஆர் என்னிடம் வந்து கதையை சொல்ல சொல் என்று கூற கடுப்பாகி போன ஸ்ரீதர் அந்த வாய்ப்பை நடிகை தேவிகாவிற்கு வழங்கியிருக்கிறார். அந்த படம் எப்படி ஒரு வெற்றியை பெற்றது என சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை. இப்படி சில பல பிரச்சினைகள் தான் அவர்கள் திருமண முறிவிற்கு காரணமாக இருந்திருக்கிறது. அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறி, எம்ஜிஆர் மூலமாக படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது விஜயகுமாரிக்கு.

Next Story