பாலிவுட்ல இல்லாத நடிகர்களா?.விஜயுடன் தோனி இணையும் கூட்டணியின் பின்னணி காரணம் இதோ!..
இந்திய கிரிக்கெட் அணியின் செல்லமான கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. இவரின் பங்கு இந்திய அணிக்கு மிகவும் உதவிக்கரமாக இருந்தது. அதாள பாதாளத்தில் கிடந்த இந்திய அணியை தூக்கி நிறுத்திய பெருமை தோனிக்கும் உண்டு. மக்கள் மத்தியில் ஒரு ஹீரோவாகவே வலம் வந்தார் தோனி.
சென்னை அணிக்கு ஆதரவாக ஆடியதால் யாருக்கும் இல்லாத அளவில் அளவுக்கதிகமான தமிழ் ரசிகர்களை இவர் பெற்றிருந்தார். இந்த ஒரு பெருமையை வைத்துக் கொண்டு இப்போது சென்னையில் முகாமிட்டுள்ளார் தோனி. பல விளம்பர படங்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் ஒரு ஹீரோவாக புது அவதாரம் எடுப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் நினைக்காத வகையில் படங்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தோனி.
இதையும் படிங்க : நாடக கம்பெனியில் எடுப்பு வேலை பார்த்த நபர்… பின்னாளில் ஒரு லெஜண்டு… யார் தெரியுமா??
வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரானாலும் ஏன் விஜயை வைத்து தனது முதல் படத்தை திட்டமிடுகிறார் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்திருக்கும். ஒன்று சென்னை அணியில் கேப்டனாக விளையாடியதால் அதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார் நம்ம தல. ஆதலால் இவர்களின் கூட்டணிக்கு அமோக வரவேற்பு கிடைக்கும்.
மற்றொன்று பாலிவுட்டில் தற்போது சினிமா நிலைமையே வேறு. சொல்லும்படியாக ஹிந்தியில் எந்த படங்களும் வரவில்லை. தென்னிந்தியாவில் இருந்து தான் படங்களை தயாரிக்க பாலிவுட்டிற்கு செல்கின்றனர். உதாரணமாக தெலுங்கு படமான புஷ்பா, கன்னடா படமான கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் தான் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றன. டிஜிட்டல் தளமாக மாறிவிட்டதால் படங்கள் வெளியீட்டிற்கு பாலிவுட்டில் சிரமம் ஏற்படுகிறது. பிரபலங்களும் ரசிகர்களை அந்த அளவுக்கு கவரவில்லை. இதன் காரணமாகவே தோனி தமிழ் நாட்டிலிருந்து தனது வேலையை ஆரம்பிக்கிறார் என தெரிகிறது. இதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களையும் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார் தோனி.