விருந்தோடு மருந்தா? ஜோதிகா - த்ரிஷா திடீர் பார்ட்டிக்கு அப்படி என்னதான் காரணம்?

trisha
Jyothika, Trisha: சமீபத்தில் சூர்யா ஜோதிகா தன்னுடைய வீட்டில் திடீரென ஒரு பார்ட்டி வைத்து அதில் பல திரை நட்சத்திரங்களை வரவழைத்து அந்த பார்ட்டியை கொண்டாடினார்கள். அந்த பார்ட்டிக்கு ராதிகா, ரம்யா கிருஷ்ணன், த்ரிஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஜோதிகா தன்னுடைய இணையதள பக்கத்தில் ஏற்கனவே த்ரிஷாவுடன் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தையும் தற்போது த்ரிஷாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிருந்து டைம் ஃபிளைஸ் என்ற கேப்ஷனோடு பதிவிட்டிருந்தார்.
அந்த புகைப்படம் பெரும் வைரலானது. த்ரிஷா தமிழ் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸில் கோல் அடித்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். 96 படத்துக்கு பிறகு அவருடைய கெரியர் அவ்வளவுதான் என்று இருந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் அவரை மீண்டும் ரீ ஸ்டார்ட் பண்ணுவதற்கு காரணமாக அமைந்தது. ஒரு அழகு பதுமையாக குந்தவை கேரக்டரில் நடித்து அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்தார் த்ரிஷா.
அதிலிருந்து தொடர்ந்து விஜய், அஜித், கமல் , சூர்யா என அடுத்தடுத்து படங்களில் இவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் த்ரிஷா. இந்த நிலையில் திடீரென சூர்யா கொடுத்த பார்ட்டியில் எப்படி த்ரிஷா ? என அனைவரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறும் போதுஅது விருந்தோடு மருந்தா? இல்ல வெறும் விருந்தானு தெரியவில்லை. அப்படியே மருந்தாக இருந்தாலும் வெளியில் தெரியாது. நயன்தாரா பற்றி தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

சக நடிகைகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை என்றும் இயக்குனர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை என்றும் தொடர்ந்து அவரை பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு வேளை அதை கருத்தில் கொண்டு இந்த மாதிரி பார்ட்டி வைத்து நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை தெரியப்படுத்தவே இந்த பார்ட்டி நடந்திருக்கலாம் என்று சேகுவேரா கூறினார். மேலும் ஜோதிகா சொல்லும் கருத்தும் சமீபகாலமாக தமிழ் சினிமா ரசிகர்களிடம் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.
அதை மறைப்பதற்காக கூட இந்த மாதிரி பார்ட்டி வைத்து அதை சரிகட்ட பார்க்கலாம் என்றும் சேகுவேரா கூறினார். எப்படி இருந்தாலும் சக நடிகைகள் இப்படி ஒன்றாக இருப்பது ஆரோக்கியமானது என்றும் சேகுவேரா கூறினார்.