வாட்ச்சை காட்டி கன்ஃப்யூஸ் பண்ண லோகேஷ்! ரஜினி 171 பட போஸ்டரில் ஒளிந்திருக்கும் ரகசியம்

Rajini 171: ரஜினி படம் என்றாலே ரசிகர்களுக்கு உற்சாகம் கொண்டாட்டம் தான். ஒரு கமெர்ஷியல் ஹீரோவாக பல ஆண்டுகளாக இந்த சினிமாவில் பயணம் செய்து வருகிறார் ரஜினி. அவரின் ஆரம்பகால சினிமாவில் இருந்து இன்று வரை அவரின் கெரியரில் பல மாற்றங்களை பார்க்க முடிகிறது. எல்லாவற்றையும் ரசிக்கும் படி செய்வதுதான் ரஜினியின் தனி ஸ்டைல்.

அதனாலேயேதான் அவர் என்றும் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். அவரின் நடிப்பில் பக்கா ஆக்‌ஷன் படமாக வெளியானது ஜெயிலர் திரைப்படம். எப்பேற்பட்ட வரவேற்பை பெற்றது என அனைவருக்கும் தெரியும். அதே வகையில் கோடி கோடியாக வசூலையும் வாரி இறைத்தது. ரஜினியை இப்படி காட்டினால்தான் மக்களும் ரசிக்கிறார்கள். கதை இல்லாவிட்டாலும் அவரை மாஸாக காட்டினாலே போதும் என்ற மன நிலைக்கு வந்துவிட்டார்கள் ரசிகர்கள்.

இதையும் படிங்க: பாய்ஸ் படத்தில் ஜெனிலியா கேரக்டர் நான் தான் செஞ்சிருக்கணும்… ஆனா.. ரகசியம் சொன்ன வாரிசு நடிகை…

இப்போது வேட்டையன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றது. இந்தப் படத்திலும் ரஜினி போலீஸாகத்தான் நடிக்கிறாராம். இதற்கு அடுத்தபடியாக கோலிவுட்டின் கிங் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. அந்தப் படத்தின் போஸ்டர் சமீபத்தில்தான் ரிலீஸானது. அந்த போஸ்டரில் ரஜினியை சுற்றி கடிகாரம் இருப்பதை பார்க்க முடிந்தது.

உடனே அதை பார்த்த ரசிகர்கள் டி கோடிங் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு வேளை டைம் டிராவல் கதையாக இருக்குமோ? இல்லை ரஜினி வாட்ச் மெக்கானிக்காக இருப்பாரோ என்றெல்லாம் இஷ்டத்துக்கு பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் உண்மையிலேயே அந்த கடிகாரத்தின் பின்னனி என்ன என்பதை பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: இப்போதான் இது மணிரத்தினம் படம்! சிம்புவை தொடர்ந்து ‘தக் லைஃபில்’ இணைந்த ஹேண்ட்ஸமான அந்த ஹீரோ

கைதி திரைப்படம் போன்றே இந்த ரஜினி 171 திரைப்படமும் ஒரு நாளில் நடக்க கூடிய கதையாம். அதை பிரதிபலிக்கும் விதமாகத்தான் கடிகாரத்தை போஸ்டரில் லோகேஷ் பயன்படுத்தியிருக்கிறார் என்று கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் ரஜினி ஒரு ரிட்டையர்டு போலீஸ் அல்லது ரிட்டையர்டு மிலிட்டரி ஆஃபிஸராக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

Related Articles

Next Story