Cinema History
முதல்வன் பட பாட்டில் பாம்பை வைத்ததே இதுக்குத்தானா?.. ஷங்கர் எமகாதகனா இருப்பார் போலயே!..
Muthalvan Movie: ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த படம் முதல்வன். பக்கா அரசியலை தன் ஸ்டைலில் சொல்லி ரசிகர்களை பிரமிக்க வைத்திருப்பார் ஷங்கர். அந்தப் படத்தில் ‘முதல்வனே என்னை நீ’ என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். கூடவே அந்தப் பாட்டில் மூன்று பாம்புகளையும் காட்டியிருப்ப்பார்.
மணிவண்ணன், வடிவேலு, ரகுவரன் உருவத்தில் கிராஃபிக்ஸ் மூலமாக அந்தப் பாம்புகளை சித்தரித்திருப்பார் ஷங்கர். ஆனால் உண்மையிலேயே மூன்று பாம்புகள் இல்லை.மொத்தம் ஐந்து பாம்புகளாம். இந்த பாம்புகளை அந்தப் பாட்டில் வைத்ததன் பின்னனி இப்போது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அச்சச்சோ.. சேதி தெரியுமா?.. அந்த சீரியல் குயினின் பிட்டு படம் லீக் ஆகிடுச்சாம்!.. சும்மா வைரலாகுது!..
படத்தின் கதைப்படி ஹீரோவுக்கு எப்போ கால் பண்ணினாலும் அவர் பிஸியாக இருக்கிறார் என வடிவேலு மற்றும் மணிவண்ணன்தான் பதில் சொல்வார்கள். இதனால் கடுப்பான ஹீரோயின் தன் கனவு உலகத்துலயாவது ஹீரோவுடன் டூயட் ஆடலாம் என பாடிய பாடல்தான் இது.ஆனால் கனவு உலகத்துலயும் முதல்வரான ஹீரோ ஃபைல்ஸை போட்டு புரட்டிக் கொண்டிருப்பார்.
இங்கேயாவது என்னுடன் கொஞ்சம் நேரம் செலவழிக்கக் கூடாதா என ஹீரோவை இழுத்துக் கொண்டு ஓடும் போது நிஜ உலக தொல்லைகள் பாம்பாக வந்து ஹீரோவை ஹீரோயினுடன் நெருங்க விடாமல் அவர்களை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும்.
இதையும் படிங்க: நடிகனாக இருப்பதை விட அதுதான் பெரிய சந்தோஷம்! ரஜினி சொன்ன சீக்ரெட்
இதில் மணிவண்ணன் , வடிவேலு அர்ஜூனுடன் கூடவே இருப்பவர்கள். அரசியலில் அர்ஜூனுக்கு தொல்லைக் கொடுக்கும் ரகுவரன் மற்றும் ரகுவரனின் அல்லக்கை கொச்சின் ஹனிஃபா என அர்ஜூனுக்கு பல வகைகளில் இடையூறாக இருக்கும் இந்த கதாபாத்திரங்களைத்தான் பாம்பாக சித்தரித்திருப்பார் ஷங்கர்.
இதில் ஐந்தாவது பாம்பாக ஹீரோயின் அப்பா விஜயகுமார். அதுமட்டுமில்லாமல் இந்தப் பாம்பின் கழுத்தில் govt job என்று கூட எழுதியிருக்கும். கதைப்படி தன் மகளை அரசு உத்தியோகத்தில் இருக்கும் ஒருவருக்குத்தான் திருமணம் செய்து வைப்பேன் என பிடிவாதமாக இருக்கும் கேரக்டர்தான் விஜயகுமார். அதை இந்தப் பாட்டில் காட்டியிருப்பார் ஷங்கர்.
இதில் மற்ற நான்கு பாம்புகளையும் ஒழித்துக் கட்டிய அர்ஜூன் அப்பா பாம்பை ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பார். ஏனெனில் ஹீரோயின் அப்பா ஆச்சே. அதனால் அந்த அப்பா பாம்பு மீது மதிப்பும் மரியாதையும் இருப்பதால் விழிபிதுங்கி நிற்க அப்பா பாம்பு முதல்வனான நாயகனை விழுங்கி விடும். இப்படி ஒரே பாட்டில் படத்தின் மொத்தக் கதையையும் அழகாக காட்டி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருப்பார் ஷங்கர்.
இதையும் படிங்க: எதிர்நீச்சல்: ஆவேசத்தில் ஈஸ்வரி… அடி வாங்கிய கதிர்… புலம்பி தள்ளும் நந்தினி…