திடீரென ரசிகர்களை சந்தித்த சூர்யா.. வெலவெலத்து போன காவல்துறை! இதுதான் மேட்டரா?

by Rohini |   ( Updated:2025-04-16 07:22:17  )
surya1
X

surya1

Surya: தற்போது சூர்யா ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கும் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கங்குவா. யாரும் எதிர்பாராத ஒரு தோல்வியை தழுவியது. மேக்கிங் ரீதியாகவும் பட்ஜெட் ரீதியாகவும் படம் பிரம்மாண்டமாக இருந்ததே தவிர ஸ்கிரீன் பிளே படத்தை சரிவர கொண்டு போகவில்லை என்பதுதான் அனைவரின் விமர்சனமாக இருந்தது.

அதில் சூர்யாவின் கடின உழைப்பு நன்றாகவே தெரிந்தது. கங்குவா படத்திற்காக இரண்டு வருடம் கடுமையாக உழைத்தார் சூர்யா. அதுவரை வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் தன்னுடைய முழு உழைப்பையும் கங்குவா படத்தில் போட்டார். ஆனால் அதற்கு பிரதிபலனாக கடுமையான விமர்சனம் மட்டுமே கிடைத்தது. இந்த நிலையில் அடுத்ததாக ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் சூர்யா.

கார்த்திக் சுப்புராஜ், சூர்யா முதன்முறையாக இணைந்த படம் தான் ரெட்ரோ. அந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்தப் படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. வரும் 20ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்து இருக்கின்றன .இந்த நிலையில் திடீரென தனது ரசிகர்களை கூட்டி ஒரு சந்திப்பை நிகழ்த்தினார் சூர்யா.

ஏன் இந்த திடீர் சந்திப்பு என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வந்தது. ஆனால் கொரோனா காலத்தில் அவருடைய ரசிகர் மன்றம் சார்பாக பல பேர் ரத்த தானம் கொடுப்பது நிவாரண உதவிகள் கொடுப்பது என நிறைய வேலைகளை செய்தார்கள். அப்போது சூர்யா தரப்பில் இருந்து வெறும் வாழ்த்து செய்தி மட்டுமே சென்றன .ஆனால் ரசிகர்களின் ஆசை சூர்யாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதுதான் .

அதை அறிந்த சூர்யா புகைப்படம் எடுப்பதற்காகவே இந்த ஒரு சந்திப்பை நிகழ்த்தி இருக்கிறாராம். கிட்டத்தட்ட 3500 பேர் வரவழைக்கப்பட்டு அனைவருடனும் புகைப்படம் எடுத்திருக்கிறார் .ஆனால் வந்தவர்கள் சும்மா இல்லாமல் பெரிய பெரிய கட்டவுட் பேனர் எல்லாம் வைத்து காவல்துறையை மிரள வைத்திருக்கின்றனர். ஒரு சாதாரண ரசிகர்கள் சந்திப்பு தானே என எந்த ஒரு முன் அனுமதியும் சூர்யா தரப்பில் இருந்து பெறவில்லை.

ஆனால் இப்படி ரசிகர்கள் செய்த செயலால் காவல்துறையினர் மிரண்டு போய்விட்டனர். திடீரென காவல்துறையினரும் வந்து என்ன எதற்காக இந்த ஒரு சந்திப்பு என்றெல்லாம் பல கேள்விகளை கேட்டு இருக்கின்றனர் .அதன் பிறகு தான் புகைப்படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்ற ஒரு உண்மையை சூர்யா தரப்பில் இருந்து கூறி அனுப்பி வைத்திருக்கின்றனர்.

Next Story