18வருடங்கள் சபரிமலைக்கு மாலை போட்ட விஜயகாந்த்.. திடீரென நிறுத்திய காரணம் என்னனு தெரியுமா?..

Published on: December 21, 2022
cap_main_cine
---Advertisement---

தமிழ் சினிமாவில் கருப்பு வைரமாக மின்னியவர் நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். இவரின் பெருந்தன்மைக்கு சான்றாக ஏராளமான விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம். சரியான சாமி பக்தி மிக்கவர் தான் நம்ம கேப்டன்.இவரின் வீட்டு பூஜை அறையில் எல்லா மதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்

அனைத்து மதங்களின் படங்களும் இருக்குமாம். இன்று வரை அதை அப்படியே பின்பற்றியும் வருகிறார்களாம். ஆரம்பகாலங்களில்வில்லனாக நடித்து பேர் பெற்றவர் இனி வில்லனாக நடிக்க வேண்டாம் , ஹீரோவாக நடித்தால் இன்னும் மக்கள் மனதில் நிச்சயமாகஇடம் பிடித்து விடுவாய் என்ற அவரது நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் தூண்டுதலின் பேரில் தான் ஹீரோவாககளம் இறங்கினாராம் விஜயகாந்த்.

cap1_cine
vijayakanth

அதன் பிறகு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வெற்றியை பெற்று வந்த விஜயகாந்த் வருடத்திற்கு 18 படங்கள் என்ற எண்ணிககையில் நடித்துக் கொண்டிருந்த நேரம் எல்லாம் நடந்திருக்கிறது. மக்களுக்கு நல்லதையேசெய்யவேண்டும் என்ற எண்ணப்பாட்டில் தான் விஜயகாந்த் எப்பொழுதும் இருப்பாராம்.

இதையும் படிங்க : விஜயகாந்த்துடன் பல முறை மோதிய சூர்யா??… இதை யாருமே கண்டுக்கலை போலயே!!

தன்னுடைய புரடக்‌ஷன் கம்பெனிகள் மூலம் முதன் முதலில் சாப்பாட்டை போட ஆரம்பித்தவர் இவர் தான். அதன் படியே இன்று வரை அனைத்து கம்பெனிகளும் பின்பற்றி வருகின்றனர். வருடந்தோறும் சபரிமலை கோயிலுக்கு இருமுடி கட்டிக் கொண்டு சாமியை தரிசனம் செய்து வருவாராம் நம்ம கேப்டன்.

cap2_cine
vijayakanth

கிட்டத்தட்ட 18 வருடங்கள் சபரிமலைக்கு சென்ற விஜயகாந்த் ஒரு மாபெரும் நடிகராக வளர்ந்த பிறகும் இருமுடி கட்டிக் கொண்டு ஒரு சமயம் சென்றிருக்கிறார். விஜயகாந்த் கோயிலுக்கு வந்திருக்கிறார் என்று அறிந்த மற்ற ஐயப்ப பக்தர்கள் விஜயகாந்தை காண ஏராளமானோர் வந்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : இதுக்கு மேல தல தாங்கமாட்டாரு!.. படப்பிடிப்பில் கோபப்பட்ட அஜித்.. பரபரப்பில் எடுத்த சீனுதான் ஹைலைட்டே..

அப்போது பக்தர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறதாம். அதிலிருந்தே சபரி மலைக்கு மாலை போடுவதையே நிறுத்திக் கொண்டாராம் விஜயகாந்த். தன்னால் மற்றவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார் கேப்டன்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.