அஜித் கூட படம் பண்ணாததற்கு காரணம் இதுதான்! ரகசியம் பகிர்ந்த விக்ரமன்
தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் அஜித். இவரின் படங்கள் அவரை சார்ந்த ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்தாகவே இருக்கின்றன. ரசிகர்களை நேரிடையாக சந்திக்க விரும்பாத நிலையிலும் இன்னும் அவர் மீது வைத்திருக்கும் அன்பு குறையாமல் உயிரையே வைத்திருக்கும் ரசிகர்களைத்தான் பார்க்க முடிகிறது.
இது எந்த அளவுக்கு சாத்தியம் என கோடம்பாக்கத்தையே மெய்சிலிர்க்க வைக்கின்றது. ஆரம்பத்தில் ஒரு குடும்ப பாங்கான கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வந்த அஜித் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், அவள் வருவாளா, வாலி போன்ற படங்கள் மூலம் மிகவும் பாராட்டப்பட்டார். அதுவும் குறிப்பாக காதல் கோட்டை படம் அவரை திரும்ப பார்க்க வைத்தது.
இந்த நிலையில் குடும்பக் கதைகளுக்கு சொந்தக்காரராக விளங்கும் இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித்தை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அவரின் இயக்கத்தில் பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சூர்யவம்சம், உன்னை நினைத்து போன்ற படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் ஒரு சிறிய கேமியோ ரோலில் நடித்திருப்பார் அஜித். ஆனால் அஜித்தை வைத்து ஒரு முழு படத்தை விக்ரமனால் இயக்க முடியவில்லை. அதற்கான காரணத்தை அவரே கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : கோடி ரூபாய் கொடுப்பதாக சொல்லியும் ரஜினிகாந்த் செய்யாத காரியம்… இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாவா இருக்குறது…
அதாவது அந்தப் படத்திற்கு பிறகு அஜித் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்துவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் அவர் ஒரு ஆக்ஷன் படம் எடுத்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்பதால் எடுக்கமுடியவில்லையாம். மற்றபடி அவரின் வளர்ச்சியை தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று விக்ரமன் கூறினார்.