விஷாலுக்கு ஏற்பட்ட இப்படி ஒரு அவல நிலைக்கு என்ன காரணம் தெரியுமா?? பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்…

Vishal
நடிகர் விஷால் “செல்லமே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமனார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். தனது முதல் திரைப்படத்திலேயே மக்களின் மனதில் பிரபலமான கதாநாயகனாக ஆனார் விஷால்.
“செல்லமே” திரைப்படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் வெளிவந்த “சண்டகோழி”, “திமிரு” போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இத்திரைப்படங்களின் வெற்றியின் மூலம் விஷால் பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக தனது இரண்டாவது திரைப்படத்திலேயே ஆக்சன் ஹீரோவாக உருவானார் விஷால்.

Vishal
அதன் பின் “சிவப்பதிகாரம்”, “தாமிரபரணி”, “மலைக்கோட்டை” என தொடர் ஹிட் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்தார் விஷால். எனினும் சமீப காலமாக விஷால் நடிப்பில் வெளிவந்த “அயோக்யா”, “ஆக்சன்”, “சக்ரா”, “எனிமி” “வீரமே வாகை சூடும்”, “லத்தி” ஆகிய திரைப்படங்கள் தோல்வி திரைப்படங்களாக அமைந்தன.
தனது தொடக்க காலத்தில் இருந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துக்கொண்டு வந்த விஷாலுக்கு, கடந்த 4 வருடங்களில் வெளிவந்த திரைப்படங்கள் அவரது கேரியருக்கு எந்த விதத்திலும் உதவவில்லை என்பதாக தெரியவருகிறது.

Vishal
இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு நேயர் “ஒரு காலத்தில் விஷால் தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் ஏன் இப்போது அவரால் ஒரு ஹிட் திரைப்படத்தை கூட கொடுக்க முடியவில்லை” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.
அதற்கு சித்ரா லட்சுமணன் “விஷால் சமீப காலமாக நல்ல திரைப்படங்களை கொடுக்கவில்லை என்றால் அதற்கு முக்கிய காரணம், அவரது கதை தேர்வுதான். நல்ல கதை இருந்தால்தானே நல்ல படம் உருவாகும். அடுத்ததாக கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷால் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் அவரது திரைப்பட வாழ்க்கையிலே ஒரு மறுமலர்ச்சியை உண்டு செய்யும் என எதிர்பார்க்கிறேன்” என்று பதிலளித்திருந்தார்.
இதையும் படிங்க: நாகேஷிடம் இருந்து இதை எல்லாம் கத்துக்காதீங்க… எச்சரிக்கை விடுத்த பிரபல தயாரிப்பாளர்…

Mark Antony
விஷால் தற்போது “மார்க் ஆண்டனி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுடன் எஸ்.ஜே.சூர்யா, ரீது வர்மா ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.வ்