‘பத்து தல’ புரோமோ சாங்கில் சிம்பு இல்லாததற்கு இப்படி ஒரு காரணமா?.. என்ன ஒரு பெருந்தன்மை?..
சிம்பு,கௌதம் கார்த்திக் நடிப்பில் ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக தயாராகிக் கொண்டிருக்கிறது ‘பத்து தல’ திரைப்படம். இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை கிருஷ்ணன் என்பவர் இயக்க ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைக்க முதல் சிங்கிள் வெளியாகி பட்டையை கிளப்பியிருக்கிறது. முதலில் கௌதம் கார்த்திக் படமாக உருவாக இருந்த நிலையில் சிம்பு கேமியோ ரோலில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் இப்போது சிம்பு படமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பத்து தல படத்தின் புரோமோ வீடியோ ஒன்றை அண்மையில் நடத்தினார்கள். ஆனால் அந்த புரோமோ வீடியோவில் சிம்பு கலந்து கொள்ளவில்லை.
உடனே நெட்டிசன்கள் வாரிசு படத்தின் புரோமோ சாங்கில் கலந்து கொண்டவர் அவர் படத்திற்கு வரவில்லையே என்று கிண்டலடித்தனர். ஆனால் அதற்கு பின்னனியில் இருக்கும் காரணம் இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது நிரூபர் ஒருவரை சிம்புவின் தாயார் உஷா அழைத்து அதற்கான காரணத்தை கூறியிருக்கிறாராம்.
இந்தப் படம் கௌதம் கார்த்திக்கின் கெரியரில் முக்கிய படமாக இருக்கும் எனவும் கார்த்திக்கின் மகன் என்பதையும் தாண்டி அவர் கடும் முயற்சி எடுத்து வருகிறார் என்றும் அவரின் கெரியரை பாதிக்காத வகையில் சிம்பு எந்த ஒரு செயலையும் செய்ய விரும்பவில்லை எனவும் அதனாலேயே அந்த புரோமோவில் சிம்பு கலந்து கொள்ளவில்லை எனவும் கூறினாராம்.
கௌதம் கார்த்திக் படமாகவே இது இருக்க அந்த புரோமோவில் கௌதம் கார்த்திக்கை வைத்து மட்டும் படப்பிடிப்பை நடத்துங்கள், நான் ஆடியோ லாஞ்சில் கலந்து கொள்கிறேன் என்று சிம்பு தெரிவித்திருக்கிறார் என்றும் உஷா கூறினாராம். கௌதம் கார்த்திக் ஒரு நல்ல நிலையை அடையவே சிம்பு இப்படி செய்தார் என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : முந்தானை முடிச்சு படத்திற்கு பாக்யராஜ் போட்ட விநோத கண்டிஷன்… எல்லாத்துக்கும் இளையராஜாதான் காரணம்!