Cinema News
அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறியது ஏன் தெரியுமா?? இப்படி ஒரு முடிவை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டாங்க!!
அஜித் நடிப்பில் உருவான “துணிவு” திரைப்படம் வருகிற 11 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இத்திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் அதே நாளில் வெளியாகவுள்ளதால் இந்த பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான பொங்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்குமார் சமீப காலமாக நடித்து வரும் திரைப்படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் வலம் வருகிறார். அந்த தோற்றத்திற்கு ஏற்றார் போல் இருக்கும் கதாப்பாத்திரத்தைத்தான் தேர்ந்தெடுத்து நடிக்கவும் செய்கிறார் அஜித்.
அஜித்தின் இந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. அஜித் தான் நடித்த “மங்காத்தா” திரைப்படத்தில் இருந்துதான் இது போன்று சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கத் தொடங்கினார்.
இதையும் படிங்க: சிவாஜிக்கு பயந்து பின் வாசல் வழியாக ஓடிய விஜய்… அதுக்கப்புறம் நடந்ததுதான் ஹைலைட்…
எனினும் அதற்கு முன் “அசல்” திரைப்படத்திலேயே அது போன்ற ஒரு தோற்றத்தில்தான் அஜித் நடித்திருந்தார். இந்த நிலையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் நடிக்கத்தொடங்கியதன் பின்னணி குறித்த ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது “அசல்” திரைப்படத்தில் நடித்தபோது தலைமுடிக்கு Dye அடிக்க வேண்டிய நிலை வந்ததாம். “ஏன் நாம் Dye அடித்து நடிக்க வேண்டும். Dye அடிக்காமல் அப்படியே நடித்தால் என்ன என்று அவருக்கு தோன்றியதாம்.” ஆதலால்தான் தனது அடுத்த திரைப்படமான “மங்காத்தா” திரைப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்க முடிவெடுத்தாராம்.