More
Categories: Cinema News latest news

ஆண்ட்டியின் கட்டுப்பாட்டில் இருந்தாரா நடிகர் கரண்?… மார்கெட் போனதுக்கு இதுதான் காரணமா?..

சினிமாவில் சில நடிகர்கள் திடீரென காணாமல் போனாலும் ரசிகர்களின் மனதை விட்டு போயிருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் கரண்.

குழந்தை நட்சத்திரமாக கரண்

Advertising
Advertising

நடிகர் கரண் தனது சிறு வயதிலேயே பல மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவரது இயற்பெயர் ரகு. 1982 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த “இனா” என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார் கரண். அதனை தொடர்ந்து பல மலையாளத் திரைப்படங்களில் நடித்த கரண், தமிழில் “தீச்சட்டி கோவிந்தன்” என்ற திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

Karan

எனினும் கமல்ஹாசன் நடித்த “நம்மவர்” திரைப்படத்தில் கரண் என்ற பெயர் இவருக்கு அளிக்கப்பட்டது. மேலும் இத்திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் கரண். இத்திரைப்படம் கரணுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என பல வேடங்களில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் கரண்.

ஹீரோவாக கரண்

இவ்வாறு பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த கரண், “கொக்கி” திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அதனை தொடர்ந்து “கருப்பசாமி குத்தகைக்காரன்”, “காத்தவராயன்”, “தம்பி வெட்டோட்டி சுந்தரம்” ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இத்திரைப்படங்கள் அவ்வளவாக வெற்றிபெறவில்லை.

Karan

கடைசி படம்

கரண் நடித்த கடைசி திரைப்படமாக “உச்சத்துல சிவா” என்ற திரைப்படம் அமைந்தது. இத்திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து கரண் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

ஆண்ட்டியின் கட்டுப்பாட்டில் கரண்

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, தனது வீடியோ ஒன்றில் கரண் குறித்த ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Cheyyaru Balu

அதாவது கரண் வளர்ந்து வந்த பிறகு அவர் ஒரு ஆண்ட்டி வயதுடைய பெண்ணின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர்தான் கரணுக்கு மேனேஜராக இருந்தார் எனவும் பல கிசுகிசுக்கள் வந்ததாம். அதே போல் அந்த பெண்ணால்தான் கரணின் மார்க்கெட் சரிந்தது எனவும் அப்போது கூறப்பட்டதாம். ஆனால் இது முழுக்க முழுக்க உண்மை என கூறமுடியாது என்று அப்பேட்டியில் செய்யாறு பாலு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Arun Prasad

Recent Posts