அஜித்குமார் சொந்த படம் எடுக்காததற்கு இப்படி ஒரு விநோத காரணம் இருக்கா?… என்னப்பா சொல்றீங்க!

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வரும் அஜித்குமார், தொடக்கத்தில் “என் வீடு என் கணவர்” என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன் பின் தெலுங்கில் “பிரேம புஸ்தகம்”, தமிழில் “அமராவதி” ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய அஜித், அதன் பின், “ஆசை”, “காதல் கோட்டை”, “காதல் மன்னன்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வளர்ந்தார்.

இவருக்கென்று ஒரு ஆரவாரமான ரசிகர் கூட்டம் உண்டாயிற்று. அதனை தொடர்ந்து “தீனா” திரைப்படத்தில் இருந்து ‘தல’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். மேலும் இவருக்கு “அல்டிமேட் ஸ்டார்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை துறந்தார். அதன் பின் தன்னை தல என்று அழைக்காதீர்கள் எனவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அஜித் குமார் டாப் நடிகராக வலம் வந்தாலும் அவர் எந்த திரைப்படத்தையும் தயாரித்தது இல்லை. ரஜினி, கமல், விஜய், போன்ற டாப் நடிகர்கள் சில திரைப்படங்களை தயாரித்துள்ளனர். ஆனால் அஜித் இதுவரை தயாரிப்பாளராக களமிறங்கவில்லை.

இந்த நிலையில் அஜித் ஏன் திரைப்படங்களை தயாரிப்பது இல்லை, அதற்கான காரணம் என்ன என்பது குறித்த ஒரு தகவலை பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது நமது நடிப்பின் மூலமாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோர் வருமானம் பெறவேண்டும், நமது உழைப்பால் மற்றவர்களும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தால்தான் அஜித் திரைப்படங்களை தயாரிப்பது இல்லையாம். திரைப்படங்கள் தயாரித்தால் நமக்குத்தான் லாபம் வரும் ஆனால் நாம் நடித்தால் அனைவருக்கும் லாபம் வரும் என்பதால்தான் அவர் தயாரிப்பாளர் ஆகவில்லையாம்.

இதையும் படிங்க: தலைமுடிய கரெக்ட் பண்ணது ஒரு குத்தமா?… முரளியை பங்கமாய் கலாய்த்த பிரபல இயக்குனர்…

 

Related Articles

Next Story