ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜாவிடம் இருந்து பிரிந்ததுக்கு இதுதான் காரணம்!! இசைஞானி கொஞ்சம் மனசு வச்சிருக்கலாமோ?…
ஏ.ஆர்.ரஹ்மான்-இளையராஜா
ஏ.ஆர்.ரஹ்மான் தொடக்க காலத்தில் இளையராஜாவிடம் கீ போர்டு வாசித்துக்கொண்டிருந்தார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அதன் பின் பாலசந்தர் தான் தயாரித்த “ரோஜா” திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தினார்.
ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவிடம் கிட்டத்தட்ட 500 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். அப்போது மிகவும் நவீன இசைக்கருவிகளை கையாள்வதில் ஏ.ஆர்.ரஹ்மான் கைத்தேர்ந்திருந்தாராம். இவ்வாறு பல திரைப்படங்கள் இளையராஜாவுடன் பயணித்த ஏ.ஆர்.ரஹ்மான், ஏன் பிரிந்தார் என்று பல கேள்விகள் எழுகின்றன.
எனினும் சமீபத்தில் பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், தனது பேட்டி ஒன்றில் ஒரு தகவலை கூறியிருந்தார். அதாவது இளையராஜாவிடம் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஏ.ஆர்.ரஹ்மான் வெளிநாட்டில் இருந்து ஒரு நவீன இசைக்கருவியை இறக்குமதி செய்தார், ஆனால் இளையராஜா அந்த இசைக்கருவியை தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி கஸ்டம்ஸில் இருந்து அந்த கருவியை வெளியே எடுக்க விடவில்லை என்று கூறியிருந்தார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரிவு
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருடன் பணியாற்றிய ஷங்கர் என்பவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.
அப்போது நிருபர், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இடையே என்ன பிரச்சனை என்று கேட்டிருந்தார். அதற்கு அவர் , “ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு கீபோர்டுக்கான Attachment-ஐ வெளிநாட்டில் இருந்து வரவழைத்திருந்தார். ஆனால் கஸ்டம்ஸில் ஒரு குறிப்பிட்ட தொகை செழுத்தினால்தான் அந்த கருவியை கொடுப்போம் என கூறியிருக்கிறார் . ஆதலால் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அந்த கருவியை மீட்டுத்தருமாறு இளையராஜாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஆனால் இளையராஜாவோ தான் அவ்வாறு செய்யமுடியாது என மறுத்திருக்கிறார். மேலும், “இந்த மாதிரி கேட்குற வேலை எல்லாம் என் கிட்ட வச்சிக்காத. நீ அதை எப்படி வேணாலும் மீட்டுக்கோ. நான் இந்த மாதிரிலாம் ஹெல்ப் பண்ணமாட்டேன்” என கூறியிருக்கிறார்.
உடனே ஏ.ஆர்.ரஹ்மான் அதற்கு அடுத்த நாளில் இருந்து இளையராஜாவிடம் பணியாற்ற வரவில்லையாம். இந்த காரணத்தினால்தான் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவிடம் இருந்து பிரிந்தார் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாக்யராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன்!.. கேட்கும்போதே வேற லெவலா இருக்கே!..