‘ராஜபாட்டை’மிகப்பெரிய ஃபிளாப்!.. விக்ரம் சொன்னத கேட்டேன்.. தோல்வி குறித்து மனம் திறந்த சுசீந்திரன்..
தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் வெற்றி இயக்குனராக பயணித்து வந்தவர்களில் இயக்குனர் சுசீந்திரனும் ஒருவர்.
நான் மகான் அல்ல, பாண்டியநாடு, வெண்ணிலா கபடிக் குழு போன்ற படங்களின் வெற்றி சுசீந்திரனை தவிர்க்க முடியாத இயக்குனராக மாற்றியது.
அதன் தொடர்ச்சியாக அழகர் சாமியும் குதிரையும் படத்தை இயக்கினார். அந்த படம் கமெரிஷியலாக வெற்றி அடையவில்லை என்றாலும் சுசீந்திரனுக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது. அடுத்ததாக நடிகர் விக்ரமை வைத்து ராஜபாட்டை என்ற படத்தை இயக்கலாம் என முடிவு செய்தார் சுசீந்திரன்.
அதனால் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்த அந்த சமயத்தில் தான் விக்ரமின் தெய்வத்திருமகள், காசி போன்ற படங்கள் வெற்றியின் லிஸ்டில் இருந்தன. விக்ரம் சுசீந்திரனிடம் ‘ நான் தொடர்ச்சியாக சீரிஸ் படங்களாகவே பண்ணிவிட்டேன், அதனால் ஒரு மாஸ் படமாக இருந்தால் நன்றாக இருக்கும், அந்த மாதிரியான கதையை தயார் செய்யுங்கள்’ என்று கூறினாராம்.
இதையும் படிங்க : துணிவு படத்தின் செகன்ட் ஆஃப் சும்மா தெறிக்கும்!… கொஞ்சம் மிஸ் ஆனாலும் வாரிசு காலி! என்னப்பா சொல்றீங்க?..
அதற்கு சுசீந்திரன் எனக்கு மாஸ் கதை எடுக்க தெரியாது என்று கூற விக்ரமின் யோசனைப் படி வேறொருவரிடம் இருந்து ஸ்கிரிப்டை வாங்கி சுசீந்திரன் இந்த படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் படம் அட்டர் ஃப்ளாப். இதை பற்றி ஒரு பேட்டியில் சுசீந்திரன் கூறும் போது இந்த படத்தின் தோல்வியை வேறொரு இயக்குனரிடம் திணிக்க முடியாது.
கதையை வாங்கும் போது நான் யோசித்திருக்க வேண்டும் என்று கூறினார். கதையை நன்றாக படித்திருக்க வேண்டும் என்றும் கூறினார். ஒரு கட்டத்தில் ராஜபாட்டை கதையின் மெயின் டாப்பிக்கை பற்றி நான் விக்ரம் மற்ற டெக்னீஷியன்ஸ் எல்லாம் ஆலோசனை செய்து இந்த டாப்பிக்கையே வேண்டாம் என முடிவு எடுத்தோம். ஆனால் அதுவே இந்த படத்தின் பெருந்தோல்விக்கு காரணமாகி விட்டது என்று சுசீந்திரன் கூறினார்.
அதன் பிறகு இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் மக்களை திருப்திபடுத்தவில்லை. ஜீவா, வெண்ணிலா கபடிக் குழு - 2, வீரபாண்டியபுரம், பாயும் புலி, ஈஸ்வரன் போன்ற படங்கள் இவரின் லிஸ்டில் அடங்கும் திரைப்படங்களாகும்.
வெப் சீரிஸுக்காக நடிகர் ஜெய் நடிப்பில் குற்றமே குற்றமே என்ற சீரிஸையும் எடுத்தார் சுசீந்திரன். அது ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மக்களும் மாறிவிட்டனர். அதே போல் இயக்குனர்களும் மக்களின் ரசனையை அறிந்து அதற்கேற்றாற் போல படங்களை கொடுத்தால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.