அதான சும்மா இது நடக்குமா?! SK - சீமான் சந்திப்புக்கு பின்னனியில் இருக்கும் காரணம் இதுதான்!...

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த இவர் சினிமாவிற்குள் வந்த குறுகிய காலத்திலேயே ஒரு டாப் நடிகராக வளர்ந்தார். ஆரம்பத்தில் நகைச்சுவை கலந்த கதைகளில் நடித்து சிறு குழந்தைகளை கவர்ந்தார் சிவகார்த்திகேயன்.

போகப்போக சென்டிமென்ட் ஆக்சன் கலந்த படங்களை தேர்வு செய்து நடித்ததன் மூலம் அஜித் விஜய் இவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் போல இப்போது சிவகார்த்திகேயனுக்கும் இலட்சக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர். இன்று ஒரு மாஸ் நடிகராக வளர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் உள்ள படங்களில் நடித்து மிகப் பெரிய அளவில் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்… ஷங்கர் முதல்ல தேர்ந்தெடுத்தது இளையராஜாவாம்..!

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன் ஒரு தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது ராஜ்கமல் தயாரிப்பில் அமரன் என்ற படத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு சிங்க நடை என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது.

இந்த நிலையில் திடீரென சிவகார்த்திகேயன் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமானை சந்தித்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது, இந்த திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன என பல தரப்பிலிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் இருந்து அங்கீகாரம் கிடைத்ததற்கு ஊடகவியலாளர்கள் பெரிதாக பேசிக் கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷை தொடர்ந்து அடுத்த விவகாரத்து அந்த ஹீரோவா?!.. என்னப்பா சொல்றீங்க!…

அதில் சிவகார்த்திகேயனும் ஒரு சில கருத்தை தெரிவித்திருந்தார். அதன் காரணமாக கூட சீமானை வந்து சந்தித்திருக்கலாம் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் இவர்கள் சந்திப்புக்கு உண்மையான காரணம் என்ன என்பது தற்போது வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் முருகதாஸ் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறார் என அனைவருக்குமே தெரியும்.

கோட் படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் சீமானை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் சீமான் தரப்பிலிருந்து அதற்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லையாம். அதனால் சிவகார்த்திகேயனே நேராக சென்று சீமானிடம் பேசி அதற்கான ஒப்புதலை வாங்கத்தான் இந்த சந்திப்பை நடத்தி இருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஒரே கல்லில் ரெண்டு மாங்கா! ‘கோட்’ படத்தின் தெலுங்கு ரைட்ஸை கைப்பற்றும் முயற்சியில் அஜித் பட நிறுவனம்

 

Related Articles

Next Story