ரேவதியின் வீழ்ச்சிக்கு இந்த முக்கிய சம்பவம்தான் காரணம்…! கொஞ்சம் உஷாரா இருந்திருக்கலாம்…

Published on: February 14, 2023
Revathi
---Advertisement---

1980களில் தமிழ் இளைஞர்களின் மத்தியில் கனவுக்கன்னியாகவும் அழகு பதுமையாகவும் திகழ்ந்தவர் ரேவதி. இவரது நளினத்துக்கும் சிரிப்புக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. தமிழில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், மோகன், முரளி, கார்த்திக், பிரபு போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்த பேன் இந்திய நடிகையாகவும் திகழ்ந்தார் ரேவதி.

Revathi
Revathi

ரேவதி மிக முக்கிய நடிகையாக வளர்ந்துவந்த சமயத்தில் மலையாள இயக்குனரான சுரேஷ் சந்திர மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். எனினும் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டார்.

Revathi and Suresh Chandra Menon
Revathi and Suresh Chandra Menon

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு நேயர், ரேவதி சினிமாத் துறையில் தொட்டிருக்க வேண்டிய உயரத்தை குறித்து ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.

அந்த கேள்விக்கு சித்ரா லட்சுமணன், “மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே ரேவதி திருமணம் செய்துகொண்டார். அவரது வளர்ச்சி தடைபட்டதற்கு முதல் காரணமாக அவரது திருமணம் இருந்தது.

Revathi
Revathi

அதற்கு பின்னால் நடிப்புத் துறையில் முழு கவனத்தை செலுத்தாமல் டைரக்சன் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதுவும் அவர் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியாததற்கு ஒரு காரணம்” என்று அதில் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இயக்குனர் மகேந்திரனுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த வேலை!.. அது மட்டும் நடந்திருந்தா!..