Vijayakanth: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாளை ரிலீஸ் ஆகும் திரைப்படம்கோட். படத்தை பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பல பேட்டிகளில் கூறி வருகிறார். இதுவரை எந்த ஒரு தயாரிப்பாளரும் தான் எடுத்த படத்தை பற்றி இந்த அளவுக்கு ப்ரோமோட் செய்ததே இல்லை.
ஆனால் அர்ச்சனா கல்பாத்தி கோட் திரைப்படத்தைப் பற்றி கடந்த ஒரு வார காலமாக அனைத்து youtube சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். இன்னொரு பக்கம் விஜயின் தீவிர ரசிகை அர்ச்சனா கல்பாத்தி. அந்த ஒரு எண்ணத்தாலும் கோட் படத்தை பற்றி பலவாறு பேசி வருகிறார்.
இதையும் படிங்க: மாநாடு ஃப்ளைட் சீன்னில் நடந்த குளறுபடிகள்… சிம்புவை போட்டு படுத்திய வெங்கட்பிரபு
இந்த நிலையில் இன்று வலைப்பேச்சு சேனலிலும் அர்ச்சனா படத்தை பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். படத்தில் அப்பா மகன் என இரு வேடங்களில் நடிக்கும் விஜய்யை ஏன் டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிக்க வைத்தீர்கள்? அவர் உண்மையாகவே இளமையாக தானே இருக்கிறார். இதற்கு முன் வெளியான பிகில் படத்தில் கூட அப்படியே தானே பயன்படுத்தியிருக்கிறீர்கள்.
இதில் ஏன் டி ஏஜிங் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அர்ச்சனா கல்பாத்தி கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இதில் 25 வயது மதிக்கத்தக்க மகன் வேடத்தில் விஜய் நடிக்க வேண்டும். அதனால் பிகில் படத்தில் உள்ளது மாதிரி இருந்தால் அப்பா மகன் இருவருமே ஒரே மாதிரி இருப்பார்கள்.
இதையும் படிங்க:‘கோட்’ ரிலீஸை முன்னிட்டு மொத்த ஊழியர்களுக்கும் லீவு! யாருப்பா அந்த மகான்?
அப்படி இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் தான் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினோம். அதுமட்டுமல்லாமல் ஜெமினி மேன் படத்தின் ரீமேக் என்று சொல்கிறார்கள். கண்டிப்பாக அது இல்லை. அந்தப் படத்தில் அப்பா மகன் கேரக்டரே கிடையாது. அங்கு டி ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பார்கள்.
அது மட்டும் தான். அதனால் தான் அந்தப் படத்தின் ரெஃபரன்ஸை நாங்கள் எடுத்துக் கொண்டோம் எனக் கூறியிருக்கிறார். மேலும் விஜயகாந்த் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏன் என்ற ஒரு கேள்வியும் அர்ச்சனாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அர்ச்சனா அது நீங்கள் படத்தை பார்க்கும் பொழுது அந்த காட்சிக்கு விஜயகாந்த் தான் கரெக்டாக இருப்பார் என்பது போல் உங்களுக்கே தோன்றும்.
இதையும் படிங்க:தமிழ் சினிமாவைப் பற்றி தெரியணுமா?? இந்த நான்கு படங்களை பாருங்கள்.. விக்ரம் பளீச்
அது படத்தை பார்க்கும் பொழுது உங்களுக்கு தெரியும் என கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வெங்கட் பிரபு இந்த படத்தைப் பற்றி முதலிலேயே சொல்லும் போது விஜயகாந்த் வைத்து தான் அவர் எழுதியிருக்கிறார் என்றும் அர்ச்சனா கூறினார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…