ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்காததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா!! என்னப்பா சொல்றீங்க??

by Arun Prasad |
Rajinikanth
X

Rajinikanth

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த், உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் தனக்கென தனியாக ஒரு ரசிகர் கூட்டத்தை கைக்குள் வைத்திருக்கிறார். சினிமா உலகிற்குள் நுழைந்து 40 வருடங்களுக்கும் மேல் ஆகியும் இப்போது உச்ச நடிகராக திகழ்ந்து வருகிறார் என்றால் ரஜினிகாந்த்தின் உழைப்பும் மக்களின் மனதை ஆட்கொள்ளும் வசீகரமான நடிப்பும்தான் காரணம்.

Jailer

Jailer

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிகாந்த்துடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன் லால், சிவ ராஜ்குமார், சுனில், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு என பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், சிபி சக்ரவர்த்தியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வந்தது. ஆனால் அத்திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Chitra Lakshmanan

Chitra Lakshmanan

இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு நேயர் “ரஜினிகாந்த் கள்ளிக்காட்டு இதிகாசம், குற்றப்பரம்பரை போன்ற நாவல்களை தழுவிய கதைகளில் நடிக்கலாமே?” என ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு சித்ரா லட்சுமணன் “கள்ளிக்காட்டு இதிகாசம், குற்றப்பரம்பரை போன்ற படங்களில் ரஜினிகாந்த் நடிக்கமுடியாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம். அவருடைய இன்றைய வியாபார நிலை” என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: என்னது… இது எல்லாமே ஒரே ஆளா?? சிவாஜி படத்தை பார்த்து ஸ்தம்பித்துப்போன வெளிநாட்டினர்…

Rajinikanth

Rajinikanth

மேலும் பேசிய அவர் “ரஜினிகாந்த்துடைய திரைப்படங்களின் வியாபாரம் 250 கோடி ரூபாய்களை தொடுகின்ற அளவுக்கு இப்போது இருக்கிறது. கள்ளிக்காட்டு இதிகாசம், குற்றப்பரம்பரை போன்ற திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்தார் என்றால் அந்த திரைப்படங்களை அந்த விலைக்கு விற்கமுடியுமா என்ற சந்தேகம் தயாரிப்பாளர்களுக்கு இருக்கின்ற காரணத்தால்தான் அது போன்ற கதைகளில் அவரால் நடிக்கமுடியவில்லை” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story