அப்பாஸ் பெட்ரோல் பங்கில் வேலை செய்ய காரணமாக இருந்த அந்த சம்பவம்.. என்ன தெரியுமா?

abbas
நடிகர் அப்பாஸ் தற்சமயம் பெட்ரோல் பங்கில் பணிப்புரிந்து வருவதாக தகவல்கள் பரவி வந்தன. அவர் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றன.
தமிழ் சினிமாவில் அறிமுகமானவுடனேயே பிரபலமாவது என்பது சில கதாநாயகர்களுக்கு மட்டுமே அதிர்ஷ்டவசமாக அமையக்கூடிய ஒரு விஷயமாகும். அந்த வகையில் நடிகர் அப்பாஸ் கூட அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம்.
வட மாநிலத்தவர் என்றாலும் தமிழ் சினிமாவிற்கு வந்தவுடனேயே அப்பாஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் திரைப்படத்தில் அறிமுகமானார் அப்பாஸ். முதல் படமே பெரும் ஹிட் அப்பாஸையும் பலருக்கும் பிடித்துவிட்டது.

abbas kadal desam
இதனையடுத்து வரிசையாக வாய்ப்புகளை பெற்றார். அதன் பிறகு மொத்தம் 18 திரைப்படங்களுக்கு கால்ஷூட் ஒதுக்கியிருந்தார் அப்பாஸ். ஆனால் அதற்கு பிறகு அப்பாஸ் தேர்ந்தெடுத்த கதைகள் அவ்வளவு வரவேற்பு பெறும் படங்களாக இருக்கவில்லை.
இதனையடுத்து தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் குறைய துவங்கியது. அதன் பிறகு பெரும் கதாநாயகர்கள் படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்தார். பம்மல் கே சம்பந்தம், படையப்பா போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.

abbas
இதற்கு பிறகு சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்நிலையில் ஒரு கல்லூரி விழாவிற்கு அப்பாஸை அழைத்திருந்தனர். அவரிடம் அப்போது ஒரு பழைய மாடல் கார்தான் இருந்தது. அதில்தான் கல்லூரிக்கு சென்றார். அங்கு சென்றவுடன் கல்லூரி மாணவர்கள் அப்பாஸின் காரை பார்த்து விமர்சிக்க துவங்கிவிட்டனர்.
இதனால் மனம் உடைந்த அப்பாஸ் பிறகு இந்தியாவை விட்டே சென்றுவிட்டார். வெளிநாட்டிற்கு சென்று ஒரு பெட்ரோல் பங்கில் பணிப்புரிந்துள்ளார். அந்த புகைப்படங்களை கூட சமீபத்தில் அப்பாஸ் பகிர்ந்திருந்தார்.