எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா சுட்டுட்டாங்க. அதுக்கு பல காரணம் சொல்வாங்க. எல்லாம் பொய். ஆளுக்கு ஒண்ணு சொல்வாங்க. உண்மை என்னன்னு தாத்தாவுக்கும், எம்ஜிஆருக்கும் மட்டும் தான் தெரியும் என்கிறார் எம்.ஆர்.வாசு விக்ரம் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
தாத்தாவும், எம்ஜிஆரும் வீட்டுல கேரம்போர்டு விளையாடுவாங்க. கூட இருக்குற கும்பல் ட்விஸ்ட் பண்ணி ஏதோ ஆகிடுச்சு. ஆனா சாகற வரைக்கும் இரண்டு பேரும் எதுவுமே சொல்லலை. எதற்காக சுட்டோம்னு சொல்லல. அந்தளவுக்கு புனிதமான நட்பு. கணவன், மனைவியைத் தாண்டிய நட்பு.
துப்பாக்கிக்கு எதுக்கு லைசென்ஸ்?
ஜட்ஜ் கேட்டாரு. எம்ஜிஆரையும், உங்களையும் சுட்டுக்கிட்டீங்க. துப்பாக்கிக்கு லைசென்ஸ் இல்லைன்னு சொல்லிருக்காரு. அதுக்கு எம்.ஆர்.ராதா, எம்ஜிஆரையும் சுட்டேன். என்னையும் சுட்டேன். ரெண்டு பேரும் சாகல. இந்தத் துப்பாக்கிக்கு எதுக்கு லைசென்ஸ்? இந்த மாதிரி துப்பாக்கியை நாட்டுல தயாரிச்சா எப்படி சைனாவையும், பாகிஸ்தானையும் போரில் போய் சந்திக்கிறதுன்னு கேட்டாராம்.
அந்த அளவுக்கு அவருக்கு எக்ஸ்ட்ராடினரி ‘ஐக்யூ’ இருந்தது.படிக்கத் தெரியாதவன் கண்டுபிடிச்ச ‘அ’ னா ‘ஆ’வண்ணாவைப் படிச்சித் தான் நீங்க டாக்டரா, இஞ்சினியரா ஆகறீங்கன்னு கூட கேட்டாராம்.
பிரேக் பண்ணினவரு
எம்ஜிஆரை சுட்டதுக்குப் பிறகு ஜெயில்ல இருந்து வெளிய வந்த உடனே கூட நாடகம் நடிச்சாரு. படம் நடிச்சாரு. கூட்டம் வந்துச்சு. பியு சின்னப்பா, பாகவதர், என்எஸ்கே. மூணு பேரும் லட்சுமிகாந்தன் கொலைவழக்குல ஜெயிலுக்குப் போயிட்டு வந்தாங்க. அவங்க வெளியே வந்ததுக்கு அப்புறம் மாஸே போயிடுச்சு. ஆனா அதுலயும் பிரேக் பண்ணினவரு தான் எம்.ஆர்.ராதா.
அவர் சாகற அன்னைக்கு ரத்தக்கண்ணீர் நாடகம் நடக்க வேண்டியது. அந்த அளவுக்கு அவர் பிசிக்கலி பிட் ஆனவரு. தாத்தாவோட அந்த குஷ்டரோகி வேஷம் எனக்கு தான் செட்டானது. அதனால நான் நடிச்ச ரத்தக்கண்ணீர் நாடகமும் ஹிட்டாச்சு. வாய்ஸ் அவரே மாதிரி சூட் ஆச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ராதாரவி சொன்னது
இதுகுறித்து எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவியும் கருத்து தெரிவித்துள்ளார். என் தந்தை எம்ஜிஆரை சுட்டது ஏன் என்று அவர் சொன்னது இதுதான். அப்பாவும், எம்ஜிஆரும் நெருங்கிய நண்பர்கள். அந்த சமயத்தில் தயாரிப்பாளர் வாசு என்பவர் பெற்றால் தான் பிள்ளையா என்ற படத்தை எடுக்க 1 லட்சம் தேவைன்னு சொன்னார்.
உடனே அப்பா நான் உனக்கு பணம் தருகிறேன் என்றார். அதன்பிறகு எம்ஜிஆரின் கால்ஷீட்டும் வாங்கித் தருவதாக சொல்லி இருக்கிறார். அது அப்பாவின் 100வது படம். அதற்காக ஆலந்தூர்ல ஒரு சேட்டுக்கிட்ட போய் தோட்டத்துப் பத்திரத்தை அடமானமா வச்சி 1 லட்சம் வாங்கிக் கொடுத்தார். நியாயப்படி பார்;த்தா அந்த 1லட்ச ரூபாயை வாசு தான் என் அப்பாவிடம் கொடுக்கணும். ஆனா எம்ஜிஆர் நான் தர்றேன்னு சொல்லிவிட்டார்.
பிரச்சனை ஏற்பட காரணம்
அதுதான் என் அப்பாவுக்கும், எம்ஜிஆருக்கும் பிரச்சனை ஏற்பட காரணம். பணத்தைத் திருப்பி கொடுக்காமல் 4 நாளா அலைய விட்டுருக்காரு எம்ஜிஆர். அப்பா ரொம்ப கோபக்காரர். அவருக்கிட்ட நான் கத்துக்கிட்டதே கோபத்துல எந்த முடிவும் எடுக்கக்கூடாதுங்கறது தான். அந்தக் கோபத்துல தான் எம்ஜிஆரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் எம்ஆர்.ராதா 7 ஆண்டுகள் ஜெயில்ல இருந்துருக்காரு. அது உச்சநீதிமன்றம் வரை போய் 3 ஆண்டுகளாகக் குறைந்தது. அந்த நேரம் ஆட்சி மாறியது. கலைஞர் வந்ததும் அப்பா விடுதலை ஆனார். அப்போ கலைஞர் மட்டும் வரலன்னா அப்பாவுக்கு ஜெயில்லயே கதை முடிஞ்சிருக்கும்னும் தெரிவித்துள்ளார்.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…