ரஜினி ராகவேந்திரரை வணங்க அந்த கன்னட நடிகர்தான் காரணமாம்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!

by Rajkumar |
ரஜினி ராகவேந்திரரை வணங்க அந்த கன்னட நடிகர்தான் காரணமாம்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!
X

தமிழ் சினிமாவில் உள்ள பெரும் ஆளுமைகளில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். அதிகப்பட்சம் அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றாலே அந்த படம் நல்ல ஹிட் கொடுத்துவிடும்.

தற்சமயம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் அடுத்து ஒரு திரைப்படம் நடிக்க இருக்கிறார். ஞானவேல் ஏற்கனவே ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கியுள்ளதால் இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்துள்ளது.

சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டம் முதலே கடவுள் ராகவேந்திரர் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் ரஜினிகாந்த். தனது 100வது திரைப்படம் நடிக்கும்போது ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றையே கதையாக நடித்தார். ரஜினிகாந்த் ராகவேந்திரர் மீது இவ்வளவு ஈடுபாடாக இருப்பதற்கு காரணமாக இருந்தவர் அப்போதைய கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்கள்தான்.

ரஜினி ரசித்த நடிகர்:

சொல்ல போனால் நடிகர் ரஜினி ராஜ்குமாரின் பெரிய விசிறி. ராஜ்குமாரின் நடிப்பை பார்த்துதான் ரஜினி வளர்ந்தார். அவரை பார்த்துதான் இவர் நடிகர் ஆவதற்கே ஆசைப்பட்டார். கன்னட நடிகர் ராஜ்குமார் ராகவேந்தர் மீது பக்தி கொண்டவர். ஏற்கனவே கன்னடத்தில் ராகவேந்தரரின் கதை மந்த்ரலயா மகத்மே என்னும் பெயரில் படமாக்கப்பட்டது.

அதில் ராஜ்குமார்தான் ராகவேந்திரராக நடித்தார். அதை பார்த்தப்போதே ரஜினிக்கும் ராகவேந்திரராக நடிக்க ஆசை இருந்து வந்தது. எனவே தனது 100 ஆவது திரைப்படத்தில் அவர் அந்த ஆசையை நிறைவேற்றி கொண்டார்.

Next Story