ரஜினி படத்துல மட்டும் நடிப்பீங்க!… விஜய் படத்துல நடிக்க முடியாதா?!… இப்ப எங்க போச்சு உங்க கொள்கை!…

Published on: November 13, 2024
---Advertisement---

நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் சத்யராஜ் விஜயுடன் மட்டும் நடிப்பதற்கு ஏன் மறுப்பு தெரிவித்தார் என்று வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் 80’ஸ் காலகட்டத்தில் மிகப் பிரபல நடிகராகவும் வில்லனாகவும் வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்த இவர் பின்னர் வில்லன் கதாபாத்திரங்களிலும் மிரள வைத்திருப்பார். தற்போது வரை சினிமாவில் நடித்து வருகின்றார். ஹீரோவாக இல்லை என்றாலும் குணசத்திர கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து பலரையும் ஆச்சிரியப்படுத்தி வருகின்றார்.

இதையும் படிங்க: Amaran: இது நான் முகுந்துக்கு செய்யும் அஞ்சலி!. சம்பளமே வாங்காம அமரன் படத்தில் நடித்தவர் நெகிழ்ச்சி!..

அதிலும் பாகுபலி கட்டப்பாவை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக இருந்து வரும் நடிகர் சத்யராஜ் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்து வருகின்றார். இந்த தகவல் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியம்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்து கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக மிஸ்டர் பாரத் என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். அதற்கு பிறகு இருவருக்கும் இடையே சில மனஸ்தாபம் இருந்து வந்தது. அதிலும் காவிரி பிரச்சனை மிகப் பெரியதாக உருவெடுத்த சமயத்தில் மேடையில் ரஜினிகாந்தை வைத்துக் கொண்டே சரமாரியாக பேசி இருப்பார் சத்யராஜ்.

அதன் பிறகு ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் முதலில் சத்யராஜ் தான் வில்லனாக நடிப்பதற்கு கேட்டிருந்தார்கள். ஆனால் அந்த வாய்ப்பை சத்யராஜ் நிராகரித்து விட்டார். அதை தொடர்ந்து தற்போது பல வருடங்கள் கழித்து ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வலைப்பேச்சு பிஸ்மி சத்யராஜின் இந்த செயல் குறித்து பேசி இருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:” நடிகர் சத்யராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காவிரி பிரச்சனை வந்த போது நடிகர் ரஜினிகாந்தை சரமாரியாக விமர்சித்து இருந்தார். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு தற்போது ரஜினியுடன் சேர்ந்து மீண்டும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அப்ப அந்த ரஜினி வேற இப்ப இருக்கும் ரஜினி வேறயா? மேலும் நடிகர் விஜயுடன் சேர்ந்து தலைவா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதுவே தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க அழைத்தபோதும் அவர் எதற்காக மறுத்துவிட்டார். சத்யராஜ் திமுக கொள்கைகளை ஆதரிப்பவர். ஆனால் நடிகர் விஜய் தனது முதல் மாநாட்டில் திமுகவை தனது எதிரி என்று பேசி இருந்த காரணத்தால் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறி வருகிறார்கள். இதுவே பல வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் கொள்கைகள் கூட தான் உங்களுக்கு பிடிக்காமல் இருந்தது.

இதையும் படிங்க: Gossip: விவாகரத்தான வாரிசு நடிகரை மடக்கிய தமிழ் நடிகை.. திடீர் திருமணத்தின் பின்னணி..

தற்போது மட்டும் அவருடன் சேர்ந்து நடிக்கவில்லையா? தளபதி 69 திரைப்படத்தில் சத்யராஜ் நடிக்க முடியாமல் போனதற்கு வெறும் கொள்கை சார்ந்த காரணமாக இருக்கும் என்று எனக்கு தோணவில்லை. என்னை பொருத்தவரை இவருக்கு ஏத்த சம்பளம் அப்படத்தில் கொடுக்காமல் போனதுதான் சத்யராஜ் விலகுவதற்கு முக்கிய காரணம்’ என்று கூறி இருக்கின்றார்

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.