தமிழின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த சிவக்குமார் “அன்னக்கிளி”, “ஆட்டுக்கார அலமேலு”, “சிந்து பைரவி”, “ஒன்னா இருக்க கத்துக்கனும்”, “பொறந்த வீடா புகுந்த வீடா” போன்ற எண்ணற்ற வெற்றி திரைப்படங்களில் கதாநாயகராக நடித்துள்ளார்.
சிவக்குமார் சிறந்த நடிகர் மட்டுமல்லாது, நல்ல பேச்சாளரும் கூட. குறிப்பாக மகாபாரதம், ராமாயணம் போன்ற புராணங்களை மனப்பாடமாக பல மணிநேரம் பேசக்கூடியவர் சிவக்குமார்.
எனினும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் சிவக்குமார். அப்படி ஒரு முறை விஜயகாந்திற்கு தந்தையாக “கண்ணுப்படப் போகுதய்யா” என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர், “என்ன சார் நீங்க அப்பாவா நடிக்கிறீங்களே. எவ்வளவு பெரிய ஹீரோ நீங்க?” என கூறினாராம்.
இதனை கேட்ட சிவக்குமாருக்கு மனதில் ஒரு நெருடல் ஏற்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து இனிமேல் திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என முடிவெடுத்தாராம் சிவக்குமார்.
அதன் பின் சிவக்குமார் பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். அப்படி அவர் ஒரு தொடரில் ஒரு சென்டிமெண்ட் காட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது, அவருடன் நடிக்கும் சக நடிகை ஒருவர் சிரித்துப்பேசி அரட்டை அடித்துக்கொண்டிருந்தாராம். இதனை பார்த்த சிவக்குமார் “நான் இங்கு ஒரு காட்சியில் நடித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன இவ்வளவு சத்தம் போட்டு சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த தொடரின் இயக்குனர் அவரிடம் “சார், நம்ம எப்படியும் டப்பிங்தான் செய்யப்போகிறோம். அவங்க சிரிச்சா சிரிச்சிட்டு போறாங்க. நீங்கபாட்டுக்கு நடிங்க. இத்தனை படம் நடிச்சிருக்கீங்களே. இத பண்ண மாட்டீங்களா?” என கேட்டாராம். இது சிவக்குமாருக்கு அவமானகரமான சம்பவமாக இருந்திருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இனிமேல் சின்னத்திரையிலும் நடிக்க கூடாது என முடிவெடுத்தாராம் சிவக்குமார்.
விடாமுயற்சி திரைப்படத்திற்கு…
Maharaja: தமிழ்…
நடிகர் நாகார்ஜுனா…
Nayanthara: நடிகை…
ஆர் ஜே…