Cinema History
வாயை வைத்து வாங்கிய வாய்ப்பு!… இயக்குனரை அசர வைத்த வெண்ணிற ஆடை மூர்த்தி!…
ஜெயலலிதா நடித்த முதல் படம் சின்னத கொம்பே என்ற கன்னட படம் தான். தமிழில் என்றால் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை படம். சின்னத கொம்பே படத்தில் ஜெயலலிதாவுக்கு இருந்த வரவேற்பைப் பார்த்ததும் தான் வெண்ணிற ஆடை படத்தில் அவரை ஸ்ரீதர் நடிக்க வைத்தாராம்.
வெண்ணிற ஆடை படத்திற்கு முன்னர் ஸ்ரீதர் தயாரித்த காதலிக்க நேரமில்லை படம் செம மாஸாக இருந்தது. அதுல எல்லாரும் புதுமுகம். அதனால வெண்ணிற ஆடை படத்திலும் எல்லோரும் புதுமுகமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதன்படியே நடிகர்களும் அமைந்தனர்.
இந்தப் படத்தின் பெயரை தன்னோட பெயருடன் இணைத்துக் கொண்டவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. ஸ்ரீதரின் முக்கிய உதவியாளரான என்.சி.சக்கரவர்த்தி தான் ஸ்ரீதருக்கு மூர்த்தியை அறிமுகம் செய்து வைத்தார்.
ஸ்ரீதர் அவரைப் பார்த்ததும் ‘ரொம்ப அழகா இருக்கீங்களே உங்களை எப்படி காமெடி ரோல்ல நடிக்க வைக்கிறது?’ன்னு கேட்டாராம். ஸ்ரீதர் அப்படி சொன்ன உடனே ‘என்னோட அழகான முகமே நான் நடிக்கிறதுக்கு எதிரியா ஆயிடுச்சா?’ன்னு மூர்த்தி கேட்க, அவரு பதில் சொன்ன விதம் ஸ்ரீதருக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம்.
அப்படித் தான் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு அந்தப் படத்தில் நகைச்சுவை நடிகராக அவரை அறிமுகப்படுத்துவது என்று முடிவு செய்தாராம் ஸ்ரீதர். அப்படித் தான் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்கிறார் தயாரிப்பாளரும், இயக்குனருமான சித்ரா லெட்சுமணன்.
இதையும் படிங்க… விஜயின் அடுத்த படத்துக்கு 250 கோடியா? உசுப்பி விடுறது யாரு?.. அரசியலுக்கு முட்டுக்கட்டையா..?
1965ல் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான மாபெரும் வெற்றிப் படம் வெண்ணிற ஆடை. இந்தப் படத்தில் தான் ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி, ஸ்ரீகாந்த், ஷைலஸ்ரீ என அனைவருமே புதுமுகங்கள். எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தியின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர். அம்மம்மா காற்று வந்து, கண்ணன் என்னும், என்ன என்ன வாழ்த்துகளோ ஆகிய முத்தான பாடல்கள் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.