Categories: Cinema News latest news

சிவகார்த்திகேயன் கோட்ல நடிக்கக் காரணமான டயலாக்… அடுத்தடுத்த மெகா படங்கள்

சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் கோட் படத்தில் வந்து கலக்குவார். அது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸா இருந்தது. இந்தப் படத்துல அதுவும் தளபதி விஜயுடன் அவர் நடிக்கக் காரணமே அந்த டயலாக் தானாம். இதுகுறித்து வலைப்பேச்சு பிஸ்மி என்ன சொல்றாருன்னு பார்ப்போமா…

சிவகார்த்திகேயன் ரொம்ப பிரில்லியன்டா அவரோட ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறாரு. இந்தப் படத்திலும் தனக்கான விஷயத்தைத் தெளிவா பண்ணிட்டாருன்னு தான் நான் நினைக்கிறேன்.

Also read: பிரசாந்த் கோட்ல நடிச்சதுக்கு இதுதான் காரணம்… இப்பவாவது சொன்னங்களே!…

விஜய் அரசியலுக்குப் போறாருங்கற செய்தி வருது. 69வது படம் தான் கடைசி. அதுக்கு அப்புறம் நடிக்க மாட்டேங்கறாரு. அடுத்த தளபதி யாருன்னா சிவகார்த்திகேயன். இது சுயம்புவா வரல. இவரோ நெட்ஒர்க் கூலிப்படை தான் அப்படி ஒரு செய்தியைக் கொண்டு வர்றாங்க.

அதுக்கு ஏத்தா மாதிரி இந்தப் படத்திலும் ஒரு காட்சி வருது. சினிமாவை விட முக்கியமான வேலை உங்களுக்கு இருக்குன்னு நினைக்கிறேன். நீங்க போங்க. நான் வந்து இதைப் பார்த்துக்கறேன்னு ஒரு டயலாக் வருது. படத்துல இப்படி டயலாக் வந்தாலும் இதுக்குள்ள ஒரு உள் அர்த்தம் இருக்கு. சினிமாவை விட முக்கியமான வேலை அரசியல் உங்களுக்கு இருக்கு.

நீங்க சிஎம் நாற்காலில உட்காருங்க. சினிமாவை நான் பார்த்துக்கறேன்னு சிவகார்த்திகேயன் சொல்ற மாதிரி நாம அர்த்தப்படுத்திக்கலாம். விஜய் படத்துலயே இப்படி ஒரு காட்சி இருக்கும்போது ஆடியன்ஸ் என்ன நினைப்பாங்க.

goat

விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தான் போல. விஜய் தான் சொல்லிட்டாரோன்னு நினைக்க வாய்ப்பு இருக்கு. இதை எல்லாம் தெரிஞ்சி தான் எஸ்.கே. அந்த ரோல்ல நடிச்சிருக்காரு.

வெங்கட்பிரபு அடுத்துப் படம் பண்ணப் போறாரு. அதுல ஹீரோ சிவகார்த்திகேயன். ஏஜிஎஸ் நிறுவனமும் அடுத்து அவரை வைத்து ஒரு படம் தயாரிக்கிறாங்க. இவர்களுடைய ஆசியோடு தான் நினைச்சதை சாதிச்சிக்கிட்டு இருக்காரு சிவகார்த்திகேயன்னு தான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v