பொன்னியின் செல்வன் நாவல் படமாக்க எம்ஜிஆர், கமல் என பலரும் அரும்பாடு பட்டார்கள். ஏன் மணிரத்னம் கூட 2008ல் இதற்காக ரொம்பவே முயற்சி செய்தாராம். அப்போது விஜய், மகேஷ்பாபு, ஐஸ்வர்யா ராய் என பலரும் அந்தப் படத்தில் நடிப்பதாக இருந்ததாம்.
அதன்பிறகு பார்த்தால் படம் வெறும் பேச்சுவார்த்தையோடு நின்று போனது. அதன்பிறகு தொடர்;ந்து 2019ல் தான் அந்த நாவலைப் படமாக்க விடிவுகாலம் பிறந்தது. படப்பிடிப்பு ஜரூராகப் போய்க்கொண்டு இருந்தது. தொடர்ந்து கொரோனா வேறு இடைஞ்சல் செய்தது. அது தளர ஆரம்பித்ததும் படம் வளர ஆரம்பித்தது.
படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. படமும் ரசிகர்களின் ரசனைக்கேற்ப வெளியாகி சக்கை போடு போட்டது.
அந்த சமயத்தில் படத்திற்கான ப்ரீ ரீலீஸ் ஈவெண்ட் நடந்தது. அப்போது நடிகர் கார்த்தியிடம் ஒரு நிருபர் இப்படி ஒரு குசும்பான கேள்வியைக் கேட்டுள்ளார். அதாவது கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹாரி பாட்டர் என பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் கூட வெக்கை என்ற நாவலைப் படமாக்கினார். ஆனால் நாவலைப் படித்தவர்களுக்கு எல்லாம் படம் திருப்தியாவே இல்லை.
இதையும் படிங்க…வெண்ணக்கட்டி போல உடம்பு!.. லாஸ்லியாவை பார்த்து வெறியேத்தும் புள்ளிங்கோ!. செம பிக்ஸ்!..
இப்போது பொன்னியின் செல்வன் படமும் வரப்போகிறது. இது வாசகர்களுக்குத் திருப்தியைக் கொடுக்குமா? இதாங்க அந்த கேள்வி. ஆனாலும் கார்த்தியை சும்மா சொல்லக் கூடாது. மனிதர் கேள்வி கேட்ட நிருபரை பொளந்து கட்டிவிட்டார். இந்தப் படம் 60 வருட கனவு. இதை மணிரத்னம் சாத்தியமாக்கி இருக்காரு. தயவு செஞ்சி மார்க் போடுற வேலைக்கு எல்லாம் இங்க வராதீங்க.
இந்தப் படமே ஒரு அனுபவம். அதை அனுபவியுங்க. மணிரத்னத்தின் அனுபவம் மிகப் பெரியது. அப்படிப்பட்ட அனுபவசாலி படத்தை எடுத்தா படம் எப்படி இருக்கும்னு நீங்களே தெரிஞ்சிக்கோங்கன்னு சொல்லிட்டாராம் கார்த்தி. அதுக்கு மேலயும் நிருபர் பேசிடுவாரா என்ன..?!
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…